சாமுவேல் கொல்வில் லிண்டு

கதிர்வீச்சு வேதியியலாளர்

சாமுவேல் கொல்வில் லிண்டு (Samuel Colville Lind) என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு கதிர்வீச்சு வேதியியலாளர் ஆவார். 1879 ஆம் ஆண்டு சூன் மாதம் 15 ஆம் நாள் அமெரிக்காவின் டென்னசி மாநிலத்திலுள்ள மெக்மின்வில் நகரத்தில் பிறந்தார். சாமுவேல் கொல்வில் லிண்டுவை நவீன கதிர்வீச்சு வேதியியலின் தந்தை என்று குறிப்பிடுகிறார்கள். 1930 ஆம் ஆண்டு அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமியின் உறுப்பினராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1927 ஆம் ஆண்டில் அமெரிக்க மின்வேதியியல் கழகத்திலும், 1940 ஆம் ஆண்டில் அமெரிக்க வேதியியல் கழகத்திலும் தலைவராக பணியாற்றினார். 1947 ஆம் ஆண்டில் ஈரா ரம்சன் விருதும்[1] 1952 ஆம் ஆண்டில் பிரீசுட்லி பதக்கமும் இவர் பெற்ற விருதுகளாகும்[2][3]. 1965 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12 ஆம் நாள் லிண்டு காலமானார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Ira Remsen Award". Maryland Section. 14 November 2018. Archived from the original on 14 November 2018. பார்க்கப்பட்ட நாள் 14 November 2018.
  2. National Academy of Science, Biographical Memoirs, 74, 226-243 (1998).
  3. "Obituary: Samuel Colville Lind". Physics Today 18 (8): 84. August 1965. doi:10.1063/1.3047663. http://www.physicstoday.org/resource/1/phtoad/v18/i8/p84_s2?bypassSSO=1. பார்த்த நாள்: 2020-03-27.