சாமுவேல் பிளிம்சால்
சாமுவேல் பிளிம்சால் (Samuel Plimsoll, 10 பிப்ரவரி 1825 - 3 சூன் 1898) ஒரு ஆங்கிலேய அரசியல்வாதியும் சமூக சீர்திருத்தவாதியும் ஆவார். இவர் இன்று கப்பல்களில் பயன்படுத்தப்படும் பிளிம்சால் கோடு என்னும் பாதுகாப்புக் கோட்டினை நடைமுறைப் படுத்தியதற்காகப் போற்றப்படுகிறார்.
சாமுவேல் பிளிம்சால் | |
---|---|
![]() | |
பிறப்பு | 10 பெப்ரவரி 1824 |
இறப்பு | 3 சூன் 1898 (அகவை 74) |
கல்லறை | கென்ட் |
பணி | அரசியல்வாதி |
இவருடைய காலத்தில் அதிக பாரம் ஏற்றப்பட்ட கப்பல்கள் கடலில் செலுத்தப்பட்டன. இவை கப்பலின் மதிப்பை விட அதிகமாக காப்பீடு செய்யப்பட்டிருந்தன. இக்கப்பல்கள் இருப்பதைக் காட்டிலும் மூழ்கினால் அதிக லாபம் கிடைத்தது. இதனால் கப்பல் முதலாளிகள் தங்கள் தொழிலாளர்களைப் பற்றி கவலைப் படாமல் அதிக எடை ஏற்றிப் பயன்படுத்தினார். பிளிம்சால் இதற்கு எதிராகப் போராடி பாதுகாப்புக் கோடு நடைமுறைக்கு வரப் பாடுபட்டார். இதனால் இக்கோடுகள் பிளிம்சால் கோடுகள் எனப்படுகின்றன.