பிளிம்சால் கோடு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பிளிம்சால் கோடு என்பது கப்பல்களில் அதிகபட்ச எடை ஏற்றும் அளவைக் குறிக்கப்பயன்படுத்தப்படும் ஒரு கோடு. இக்கோடு நீரில் மூழ்குமானால் அது கப்பலில் அதிக எடை ஏற்றப்பட்டிருப்பதையும் கப்பலின் பாதுகாப்பின்மையையும் குறிக்கும்.
இக்கோடு சாமுவேல் பிளிம்சால் என்னும் ஆங்கிலேயரின் நினைவாகப் பெயரிடப்பட்டது. இவர் ஒரு அரசியல்வாதியும் சமூகசீர்திருத்தவாதியும் ஆவார். அவர் வாழ்ந்த காலத்தில் கப்பல் முதலாளிகள் கப்பலுக்கு அதன் மதிப்பைவிட மிகுதியாகக் காப்பீடு செய்து விட்டு கப்பல்களின் அதிக எடை ஏற்றிச் செலுத்தினர். இதனால் கப்பல் நீரில் செல்வதை விட முழுகினால் அதிக லாபம் கிடைத்ததால் அவ்வாறு செய்தனர். இதனால் மாலுமிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது. இத்தகைய அதிக எடை ஏற்றிச் செலுத்தப்பட்ட கப்பல்கள் மரணக்கப்பல்கள் என்னும் பொருள்படி (coffin ships) என்று அழைக்கப்பட்டன.