சாம்செட் பர்சோர் பார்திவாலா
சாம்செட் பர்சோர் பார்திவாலா (Jamshed Burjor Pardiwala) பிறப்பு: ஆகத்து 12, 1965) மே 2022 முதல் இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக உள்ளார். இவர் குஜராத் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஆவார்.
Hon'ble Justice சாம்செட் பர்சோர் பார்திவாலா Jamshed Burjor Pardiwala | |
---|---|
நீதிபதி, இந்திய உச்ச நீதிமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 9 மே 2022 | |
பரிந்துரைப்பு | என். வி. இரமணா |
நியமிப்பு | ராம் நாத் கோவிந்த் |
நீதிபதி, குஜராத் உயர் நீதிமன்றம் | |
பதவியில் 17 பிப்ரவரி 2011 – 8 மே 2022 | |
பரிந்துரைப்பு | ச. கோ. கபாதியா |
நியமிப்பு | பிரதிபா பாட்டீல் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 12 ஆகத்து 1965 மும்பை |
முன்னாள் கல்லூரி | கே. எம். சட்டக் கல்லூரி |
இணையத்தளம் | www |
ஆரம்ப வாழ்க்கை மற்றும் தொழில்
தொகுபார்திவாலா 1965 ஆகத்து 12 அன்று மும்பையில் பிறந்தார். வல்சாட்டில் உள்ள தூய ஜோசப் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார்.[1] இவர் 1988-ல் வல்சாட்டில் உள்ள கே. எம். சட்டக் கல்லூரியில் சட்டப் பட்டம் பெற்றார். பின்னர் சட்ட பயிற்சியினை 1989-ல் வல்சாட்டில் தொடங்கினார். 1994 முதல் 2000 வரை குசராத்து வழக்குரைஞர் கழகத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். குசராத்து உயர் நீதிமன்ற சட்ட சேவைகள் ஆணையத்தின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
குசராத்து உயர்நீதிமன்றத்தில்
தொகுபார்திவாலா பிப்ரவரி 17, 2011 அன்று குஜராத் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் 28 ச்அனவரி 2013 அன்று நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் குசராத்து உயர்நீதிமன்றத்தில் 2022 மே வரை பணியாற்றினார். இந்த காலகட்டத்தில், இவர் குஜராத் மாநில நீதித்துறை அகாதமியின் தலைவராகவும் பணியாற்றினார்.[2]
உச்ச நீதிமன்றத்தில்
தொகுபார்திவாலா 9 மே 2022 [3] அன்று இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். இவர் மே 2028-ல் இந்தியாவின் தலைமை நீதிபதியாகப் பதவியேற்க உள்ளார். இவர் 2 ஆண்டுகள் மற்றும் 3 மாதங்கள் இப்பதவியில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Collegium recommends names of Justices Sudhanshu Dhulia, Jamshed B Pardiwala for elevation to SC" (in en). The Indian Express. 6 May 2022. https://indianexpress.com/article/india/collegium-justices-sudhanshu-dhulia-jamshed-b-pardiwala-elevation-sc-7903191/.
- ↑ "J.B. Pardiwala". Supreme Court Observer (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-01.
- ↑ Ojha, Srishti (2022-05-09). "Justices Sudhanshu Dhulia & JB Pardiwala Take Oath As Supreme Court Judges". www.livelaw.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-11.
- ↑ "9 Next Chief Justices of India". Supreme Court Observer (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-01.