சாம் தம்பிமுத்து

சாமுவேல் பெனிங்டன் தவராசா தம்பிமுத்து (Samuel Pennington Thavarasa Tambimuttu, 1932 - 7 மே 1990) இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும், அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

சாம் தம்பிமுத்து
Sam Tambimuttu
இலங்கை நாடாளுமன்றம்
மட்டக்களப்பு மாவட்டம்
பதவியில்
1989–1990
பின்னவர்யோசப் பரராஜசிங்கம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1932
இறப்பு(1990-05-07)7 மே 1990
கொழும்பு, இலங்கை
அரசியல் கட்சிஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி
தொழில்வழக்கறிஞர்
இனம்இலங்கைத் தமிழர்

ஆரம்ப வாழ்க்கை

தொகு

தம்பிமுத்து 1932 ஆம் ஆண்டில் பிறந்தவர்.[1] இவர் இலங்கை அரசாங்க சபை உறுப்பினராக இருந்த ஈ. ஆர். தம்பிமுத்துவின் உறவினர் ஆவார்.[1][2] முன்னாள் மேலவை உறுப்பினர் எம். மாணிக்கம் என்பவரின் மகள் கலாவைத் திருமணம் புரிந்தார்.[1][3] இவர்களது மகன் அருண் தம்பிமுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக உள்ளார்.[2]

தம்பிமுத்து வழக்கறிஞராக மட்டக்களப்பில் பணியாற்றினார்.[1][3] மட்டக்களப்பு பிரஜைகள் குழுவின் தலைவராகவும் இருந்துள்ளார்.[4]

தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினராகப் பல காலம் இருந்து செயல்பட்டார்.[3] 1989 நாடாளுமன்றத் தேர்தலில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சார்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர்களில் ஒருவராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[5]

படுகொலை

தொகு

தம்பிமுத்து கொழும்பில் உள்ள கனடா தூதரகத்தின் முன்னால் 1990 மே 7 ஆம் நாள் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.[3] இதன் போது படுகாயமடைந்த இவரது மனைவி கலா 1990 மே 16 அன்று மருத்துவமனையில் காலமானார்.[3] இப்படுகொலை தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது.[6][7]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 Arumugam, S. (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. p. 221.
  2. 2.0 2.1 "Thambimuttu's widow in touching cemetery farewell". Tamil Times IX (7): 9. 15 சூன் 1990. பன்னாட்டுத் தர தொடர் எண்:0266-4488. http://noolaham.net/project/34/3335/3335.pdf. 
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 "MP and Wife Assassinated". Tamil Times IX (7): 9. 15 சூன் 1990. பன்னாட்டுத் தர தொடர் எண்:0266-4488. http://noolaham.net/project/34/3335/3335.pdf. 
  4. Mohamed, Suresh (15 சூன் 1990). "Sam Thambimuttu". Tamil Times IX (7): 11. பன்னாட்டுத் தர தொடர் எண்:0266-4488. http://noolaham.net/project/34/3335/3335.pdf. 
  5. "Result of Parliamentary General Election 1989" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2009-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-06-23.
  6. டி. பி. எஸ். ஜெயராஜ் (16 மார்ச் 2008). "Assassinating Tamil Parliamentarians: The unceasing waves". The Nation இம் மூலத்தில் இருந்து 2014-02-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140220083850/http://www.nation.lk/2008/03/16/newsfe1.htm. 
  7. Subramanian, T. S. (14 ஆகத்து 1999). "Chronicle of murders". Frontline 16 (17). பன்னாட்டுத் தர தொடர் எண்:0970-1710. http://www.hindu.com/fline/fl1617/16171020.htm. பார்த்த நாள்: 2015-06-23. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்_தம்பிமுத்து&oldid=3553436" இலிருந்து மீள்விக்கப்பட்டது