இ. இரா. தம்பிமுத்து

இம்மானுவேல் இராசநாயகம் தம்பிமுத்து (Emmanuel Rasanayagam Tambimuttu, பிறப்பு: ~1890) இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும், அரசியல்வாதியும், இலங்கை சட்டவாக்கப் பேரவை, இலங்கை அரசாங்க சபை உறுப்பினரும் ஆவார்.

ஈ. ஆர். தம்பிமுத்து
E. R. Tambimuttu

இலங்கை சட்டப்பேரவை, அரசாங்க சபை உறுப்பினர்
கிழக்குமாகாணத்திற்கான
சட்டவாக்கப் பேரவை உறுப்பினர்
பதவியில்
1921–1924
மட்டக்களப்பு
சட்டவாக்கப் பேரவை உறுப்பினர்
பதவியில்
1924–1930
திருகோணமலை-மட்டக்களப்பு
அரசாங்க சபை உறுப்பினர்
பதவியில்
1936–1943
முன்னவர் எம். எம். சுப்பிரமணியம்
பின்வந்தவர் வ. நல்லையா
தனிநபர் தகவல்
பிறப்பு அண். 1890
வாழ்க்கை துணைவர்(கள்) லோரா சித்தி
பிள்ளைகள் லோரெல்
தொழில் வழக்கறிஞர்
இனம் இலங்கைத் தமிழர்

வாழ்க்கைக் குறிப்புதொகு

தம்பிமுத்து 1890களில் பிறந்தவர்.[1] இவரது முன்னோர்கள் வட மாகாணம் நல்லூரைச் சேர்ந்தவர்கள். பின்னர் மட்டக்களப்பில் குடியேறினார்.[1]

பணிதொகு

தம்பிமுத்து ஒரு வழக்கறிஞர் ஆவார்.[1] இவர் 1921 சட்டவாக்கப் பேரவைத் தேர்தலில் கிழக்கு மாகாணத் தொகுதியில் போட்டியின்றி இலங்கை சட்டவாக்கப் பேரவைக்குத் தெரிவு செய்யப்பட்டார்.[1][2] 1924 சட்டவாக்கப் பேரவைத் தேர்தலில் மட்டக்களப்புத் தொகுதியில் போட்ட்டியிட்டு சட்டவாகக்ப் பேரவைக்கு மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.[1][2][3][4]

1931 அரசாங்க சபைத் தேர்தலைப் புறக்கணிக்க யாழ்ப்பாணம் இளைஞர் பேரவை கேட்டுக் கொண்டதற்கிணங்க தம்பிமுத்து இத்தேர்தலில் போட்டியிடவில்லை.[5] 1936 அரசாங்க சபைத் தேர்தலில் திருகோணமலை-மட்டக்களப்பு தொகுதியில் போட்டியிட்டு இலங்கை அரசாங்க சபைக்குத் தெரிவானார்.[1][6] இவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, 1943 சூன் மாதத்தில் இவர் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனாலும் அவர் தனது பதவியைத் துறக்க மறுத்ததால், அரசாங்க சபையின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.[6]

தேர்தல் வரலாறுதொகு

ஈ. ஆர். தம்பிமுத்துவின் தேர்தல் வரலாறு
தேர்தல் தொகுதி கட்சி வாக்குகள் முடிவு
1921 சட்டவாக்கப் பேரவை கிழக்கு மாகாணம் போட்டியில்லை தெரிவு
1924 சட்டவாக்கப் பேரவை மட்டக்களப்பு தெரிவு
1936 அரசாங்க சபை திருகோணமலை-மட்டக்களப்பு 11,775
கூடுதல்: 7,429
எதிர்த்துப் போட்டியிட்டவர்: ம. மு. சுப்பிரமணியம்[7]
தெரிவு

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இ._இரா._தம்பிமுத்து&oldid=3083037" இருந்து மீள்விக்கப்பட்டது