ம. மு. சுப்பிரமணியம்

(எம். எம். சுப்பிரமணியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மயில்வாகனம் முதலியார் சுப்பிரமணியம் (Mylvaganam Mudaliyar Subramaniam, (1870 – 1945) இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும், அரசியல்வாதியும், இலங்கை சட்டவாக்கப் பேரவை, இலங்கை அரசாங்க சபை உறுப்பினரும் ஆவார்.

எம். எம். சுப்பிரமணியம்
M. M. Subramaniam
இலங்கை சட்டப்பேரவை, அரசாங்க சபை உறுப்பினர்
திருகோணமலைக்கான
சட்டவாக்கப் பேரவை உறுப்பினர்
பதவியில்
1924–1930
திருகோணமலை-மட்டக்களப்பு
அரசாங்க சபை உறுப்பினர்
பதவியில்
1931–1936
பின்னவர்இ. இரா. தம்பிமுத்து
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஅண். 1870
இறப்பு1945
பிள்ளைகள்அழகராஜா, தர்மராஜா, மாணிக்கராஜா
தொழில்வழக்கறிஞர்
இனம்இலங்கைத் தமிழர்

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

சுப்பிரமணியம் ஏறத்தாழ 1870 அளவில் பிறந்தார்.[1] இலங்கையின் கிழக்கே திருகோணமலையில் சம்பத்தீவு என்ற இடத்தில் தென்னந்தோட்டங்களுக்கு உரிமையாளராகவிருந்த மயில்வாகனம் முதலியாருக்குப் பிறந்தார்.[1] சுப்பிரமணியத்திற்கு மூன்று மகன்கள்: அழகராஜா, தர்மராஜா, மாணிக்கராஜா ஆகியோர் ஆவர்.[1]

சுப்பிரமணியம் அரச வழக்கறிஞராகப் பணியாற்றியவர். திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி சபையில் உறுப்பினராக இருந்தவர்.[1] 1924 இலங்கை சட்டவாக்கப் பேரவைத் தேர்தலில் திருகோணமலைத் தொகுதியில் போட்டியிட்டு இலங்கை சட்டவாக்கப் பேரவைக்குத் தெரிவானார்.[1][2][3] 1931 இலங்கை சட்டவாக்கப் பேரவைத் தேர்தலில் திருகோணமலை-மட்டக்களப்புத் தொகுதியில் போட்டியிட்டு இலங்கை அரசாங்க சபைக்குத் தெரிவானார்.[1][4] 1931 சூலையில் புதிய அரசாங்க சபை கூடிய போது இவர் குழுக்களுக்கான துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5] 1936 அரசாங்க சபைத் தேர்தலில் திருகோணமலை-மட்டக்களப்பு தொகுதியில் போட்டியிட்டு ஈ. ஆர். தம்பிமுத்துவிடம் 7,429 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.[6]

சுப்பிரமணியம் 1945 இல் காலமானார்.[1] இவரது மகன் எஸ். எம். மாணிக்கராசா திருகோணமலைத் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.

தேர்தல் வரலாறு

தொகு
எம். எம். சுப்பிரமணியத்தின் தேர்தல் வரலாறு
தேர்தல் தொகுதி கட்சி வாக்குகள் முடிவு
1924 சட்டவாக்கப் பேரவை திருகோணமலை தெரிவு
1931 அரசாங்க சபை திருகோணமலை-மட்டக்களப்பு தெரிவு
1936 அரசாங்க சபை திருகோணமலை-மட்டக்களப்பு 4,348
வெற்றி பெற்றவர்: ஈ. ஆர். தம்பிமுத்து[6]
தோல்வி

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Arumugam, S. (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon (PDF). pp. 212–213.
  2. Rajasingham, K. T. "Chapter 5: Political polarization on communal lines". Sri Lanka: The Untold Story. Archived from the original on 2001-10-25. பார்க்கப்பட்ட நாள் 2020-03-20.
  3. Sabaratnam, T. T. "Chapter 19: The Birth and Death of the Jaffna Youth Congress". Sri Lankan Tamil Struggle.
  4. Rajasingham, K. T. "Chapter 7: State Councils - elections and boycotts". Sri Lanka: The Untold Story. Archived from the original on 2009-06-24. பார்க்கப்பட்ட நாள் 2020-03-20.
  5. "First State Council begins". சண்டே டைம்சு]]. 8 July 2007. http://www.sundaytimes.lk/070708/FunDay/heritage.html. 
  6. 6.0 6.1 "இலங்கைப் பொதுத்தேர்தல் பெறுபேறு". ஈழகேசரி. 1 மார்ச் 1936. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ம._மு._சுப்பிரமணியம்&oldid=3223237" இலிருந்து மீள்விக்கப்பட்டது