சாம் ஹிக்கின்பாட்டம்
சாமுவேல் ஹிக்கின்பாட்டம் (Sam Higginbottom) (27 அக்டோபர் 1874 – 11 ஜூன் 1958) இங்கிலாந்தின் மன்செஸ்டரில் பிறந்த இவர் இந்தியாவின் அலகாபாத்தில் ஆங்கிலேய கிறிஸ்தவ மறைபணி அமைப்பை நிறுவினார். மேலும்,இவர் அலகாபாத் வேளாண்மை நிறுவனத்தையும் நிறுவினார்.[1]
சாமுவேல் ஹிக்கின்பாட்டம் | |
---|---|
பிறப்பு | மன்செஸ்டர், இங்கிலாந்து | 27 அக்டோபர் 1874
இறப்பு | 11 சூலை 1958 புரோஸ்ட்புரூப், புளோரிடா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் | (அகவை 83)
தேசியம் | அமெரிக்கர் |
துறை | வேளாண் பொருளாதாரம் கிராமிய சமூகவியல் |
பணியிடங்கள் | சாம் ஹிக்கின்பாட்டம் வேளாண்மை, தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம், மஹேவா நைனி, அலகாபாத் 211007 |
கல்வி கற்ற இடங்கள் | பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் ஒகைய்யோ மாநிலப் பல்கலைக்கழகம் |
துணைவர் | யேன் எதிலிண்ட் கோடி |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஹிக்கின்பாட்டம் வேல்ஸில் பிறந்தார். குடும்பம் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தது. இவர் சிறுவயதிலேயே பள்ளியை விட்டு வெளியேறி, கசாப்புக்கடை சிறுவன் வாடகையுந்து ஓட்டுநர், பால் வழங்குபவர் என வெவ்வேறு காலங்களில் வெவேறு வேலைகளை செய்தார்.[1] இருப்பினும், இவர் கிறிஸ்தவ நற்செய்தியில் வலுவான ஆர்வத்தை கொண்டிருந்தார். மேலும் ஒரு போதகராகவோ அல்லது மறைபணியாளாராக மாற தீர்மானித்தார்.[1] 1894 முதல் 1899 வரை மாசச்சூசெட்ஸில் உள்ள மவுண்ட் ஹெர்மன் பள்ளியில் படித்த பின்னர்,[1] 1903 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்திலும், ஆம்ஹெர்ஸ்ட் கல்லூரியிலும் படித்து இளநிலைப் பட்டம் பெற்றார்.[1] [2] [3] [4]
இந்தியாவில் வேலை
தொகுஹென்றி போர்மனின் பரிந்துரையின் பேரில், 1903ஆம் ஆண்டில் பிரெஸ்பைடிரியன் தேவாலயத்தின் வட இந்திய சேவைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இவர் இந்தியா வந்தார்.[5] அப்போதிருந்து 1909 வரை அலகாபாத் கிறிஸ்தவக் கல்லூரியில் (இப்போது எவிங் கிறிஸ்தவக் கல்லூரி ) பொருளாதாரத்தையும், அறிவியலையும் கற்பித்தார்.<[2][5] கல்லூரியில் தன்னுடன் பணி புரிந்த ஒகையோவின் கிளீவ்லாந்தைச் சேர்ந்த யேன் எத்தேலிண்ட் கோடி என்பவரை 1904 ஆம் ஆண்டில் மணந்தார்.[6] இவர்களுக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தனர்.[2]
1909 ஆம் ஆண்டில், இவர் அமெரிக்காவுக்குத் திரும்பி ஒகைய்யோ மாநில பல்கலைக்கழகத்தில் வேளாண்மையைப் படிக்க மூன்று ஆண்டுகள் செலவிட்டார். பின்னர் மீண்டும் அலகாபாத்துக்குத் திரும்பி விஞ்ஞான விவசாய முறைகளை கற்பித்தார்.[2][6] இவரது கல்வித் திட்டங்களால் 1919இல் அலகாபாத் வேளாண் நிறுவனம் நிறுவப்பட்டது. 2009 ஆம் ஆண்டில், இது இவரது நினைவாக சாம் ஹிக்கின்பாட்டம் வேளாண்மை, தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம் ( SHUATS ) என மறுபெயரிடப்பட்டது.[7]
பிற்கால வாழ்க்கை
தொகுஇவர், 1921 இல் வெளியிடப்பட்ட தனது படைப்புகளைப் பற்றிய ஒரு புத்தகமும் 1949 இல் வெளியிடப்பட்ட சுயசரிதை என இரண்டு புத்தகங்களை எழுதினார். இந்தியாவில் இருந்தபோது, மகாத்மா காந்தி , ஜவகர்லால் நேரு ஆகியோருடன் நெருங்கிய நட்பை வளர்த்துக் கொண்டார்.[2] 1945இல் ஓய்வு பெற்று புளோரிடா சென்ற இவர் தனது மகள் திருமதி சார்லஸ் கோட்ஸின் வீட்டில் காலமானார்.[8]
தொகுப்புகள்
தொகுஇவரது ஆவணங்கள் வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் ஆல்பர்ட் மற்றும் ஷெர்லி சிறிய சிறப்பு சேகரிப்பு நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.[8]
நூலியல்
தொகு- Sam Higginbottom. The Gospel and the Plough, Or, The Old Gospel and Modern Farming in Ancient India. 1921. London: Central Board of Missions and Society for Promoting Christian Knowledge. Republished in 2006: பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4254-8665-7
- Sam Higginbottom. Sam Higginbottom, Farmer: An Autobiography. 1949. Republished in 2007: பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-548-44200-5
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 History பரணிடப்பட்டது 2016-11-14 at the வந்தவழி இயந்திரம், Allahabad Agricultural Institute website
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 Rees, David Benjamin (2002). Vehicles of Grace and Hope: Welsh Missionaries in India 1800-1970. William Carey Library. p. 59. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780878085057.
- ↑ Padre Sahib, டைம் (இதழ்), 19 September 1949
- ↑ [J.N.W.] (1944). "Sam Higginbottom. An Appreciation". Indian Farming 5 (10): 446-448.
- ↑ 5.0 5.1 Dr. Sam Higginbottom (1874-1958) பரணிடப்பட்டது 2021-07-22 at the வந்தவழி இயந்திரம், Allahabad Agricultural Institute website.
- ↑ 6.0 6.1 Padre Sahib, Time magazine, 19 September 1949
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2021-07-22.
- ↑ 8.0 8.1 "A Guide to the Additional Papers of Sam Higginbottom and Jane Ethelind Cody Higginbottom 1844-1971". University of Virginia Library. பார்க்கப்பட்ட நாள் 2 February 2019.