சாயா கங்குலி
சாயா கங்குலி (Chhaya Ganguly) இந்தியப் பின்னணிப் பாடகர் ஆவார். 26 வது தேசிய திரைப்பட விருதுகளில் "ஆப்கி யாத் ஆதி ரஹி ராத் பர்" என்ற முதல் திரைப்பட பாடலுக்காக சிறந்த பெண் பின்னணி பாடகருக்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றார்.[1] [2] அதே பாடலுக்காக, 27வது பிலிம்பேர் விருதுகளில் சிறந்த பெண் பின்னணிப் பாடகருக்கான பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.[3]
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஇவர் 1952 இல் மும்பையில் பிறந்தார். இவர் மும்பை பல்கலைக்கழகத்தில் தாவரவியலில் முதுநிலை அறிவியல் பட்டம் பெற்றார்.[1] மும்பையின் அனைத்திந்திய வானொலியிலும் தூர்தர்ஷனிலும் 35 வருடங்கள் ஒளிபரப்பு நிகழ்ச்சியாளாரகப் பணியாற்றி, 2012 இல் ஓய்வு பெற்றார்.[4]
1983 ஆம் ஆண்டு மதுசூதனன் இயக்கிய திரிகோன் கா சௌத்தா கோன் என்ற பாலிவுட் படத்தில் "பியா பியா" என்ற கதைப்பாடலை இவர் பாடினார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இவர் 1990இல் திரையுலகுக்குத் திரும்பினார். பாஸ்கர் சந்தாவர்கர் இசையமைத்த அமோல் பலேகர் திரைப்படமான தொடாசா ரூமணி ஹோ ஜெயேன் என்ற படத்தில் தலைப்புப் பாடலை பாடினார். [4]
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 "26th National Film Awards" (PDF). Directorate of Film Festivals. பார்க்கப்பட்ட நாள் 4 October 2011.
- ↑ Khurana, Suanshu (2014-04-21). "The Forgotten Voice". The Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2020-12-22.
- ↑ "The Filmfare Awards Nominations – 1979". The Times Group. Archived from the original on 29 October 2007.
- ↑ 4.0 4.1 Gaekwad, Manish (2016-04-17). "Chhaya Ganguli's impact exceeds her output". Scroll.in. பார்க்கப்பட்ட நாள் 2020-12-22.