சாயிலேசு தாபா சேத்ரி
சாயிலேசு தாபா சேத்ரி (ShaileshThapaChhetri) நேபாள காவல்துறையின் 28 ஆவது மற்றும் தற்போதைய காவல்துறை பொது ஆய்வாளர் ஆவார். நேபாள அமைச்சரவை முடிவைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு சூலை மாதம் 9 ஆம் தேதியன்று தாக்கூர் பிரசாத் கியாவாலிக்குப் பிறகு இவர் நேபாள காவல்துறைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.[1][2] 1992 ஆம் ஆண்டு மே மாதம் முதல் தேதியன்றுதான் நேபாள காவல்துறையில் ஆய்வாளராக சாயிலேசு சேர்ந்தார்.
காவல்துறை பொது ஆய்வாளர் சாயிலேசு தாபா சேத்ரி ShaileshThapaChhetri | |
---|---|
शैलेशथापाक्षेत्री | |
28 ஆவது காவல்துறை பொது ஆய்வாளர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 9 சூலை 2020 | |
குடியரசுத் தலைவர் | வித்யா தேவி பண்டாரி |
பிரதமர் | கட்க பிரசாத் சர்மா ஒளி செர் பகதூர் தேவ்பா |
துணை அதிபர் | நந்தா கிசோர் பன் |
முன்னையவர் | தாக்கூர் பிரசாத் கியாவாலி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | திசம்பர் 8, 1968 பக்தபூர் |
குடியுரிமை | நேபாளி |
தேசியம் | நேபாளி |
கல்வி | அரசறிவியல் பாடத்தில் முதுநிலை |
வேலை | காவல் அதிகாரி |
2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் தேதியன்று நடைபெறவிருந்த தேசிய சட்டமன்றத் தேர்தல் மற்றும் நாட்டின் சட்டம், ஒழுங்கு பற்றிய ஒட்டுமொத்த நிலைமை தொடர்பான மத்திய பாதுகாப்புக் குழுவின் கூட்டத்தில் சாயிலேசு தாபா சேத்ரி கலந்துகொண்டார்.[3][4] 21 நவம்பர் 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் தேதியன்று துருக்கியில் நடந்த பன்னாட்டுக் காவல் துறை கூட்டத்திலும் கலந்து கொண்டார்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "ShaileshThapaChhetri appointed the new Inspector-General of Nepal Police". The Himalayan Times. https://thehimalayantimes.com/nepal/shailesh-thapa-chhetri-appointed-the-new-inspector-general-of-nepal-police/. பார்த்த நாள்: 7 July 2020.
- ↑ https://risingnepaldaily.com/mustread/peace-security-are-precondition-to-development-home-minister-thapa
- ↑ https://thehimalayantimes.com/nepal/csc-discusses-security-concerns-for-na-election
- ↑ https://thehimalayantimes.com/nepal/cooperation-stressed-for-disaster-risk-management
- ↑ https://thehimalayantimes.com/kathmandu/igp-chhetri-off-to-turkey-to-attend-89th-interpol-general-assembly