சாரதா புரியாநாயக்

இந்திய அரசியல்வாதி

சாரதா புரியாநாயக் (Sharada Puryanaik-பிறப்பு 1971) கருநாடகாவைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2023 கருநாடக சட்டப்பேரவைத் தேர்தலில் சிமோகா ஊரகம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தத் தொகுதி பட்டியல் சாதி உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதி ஆகும். இவர் ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1] பாஜக கேபி அசோக் நாயக்கை 15,142 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 2018ஆம் ஆண்டில் இவர் அசோக் நாயக்கிடம் 3777 என்ற குறுகிய வித்தியாசத்தில் தோல்வியடைந்து குறிப்பிடத்தக்கது.[2]

சூலை 2023-இல், இவர் சபையில் சட்டமன்றக் கட்சித் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்றக் கட்சித் தலைவராக எச். டி. குமாரசாமி இருந்தார்.[3] இப்பதவிக்கு ஒரு பெண்ணை ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) கட்சி தேர்ந்தெடுப்பது இதுவே முதல் முறையாகும்.

முன்னதாக மே 2023-இல், தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை அளித்த புகாரைத் தொடர்ந்து, தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளைப் பயன்படுத்தியதாகக் கூறி கும்சி காவல்துறையினர் இவர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.[4]

மேற்கோள்கள் தொகு

  1. english. "Karnataka shimoga rural sc Election Result 2023 Live, Karnataka Assembly Election Vote Counting, Karnataka shimoga rural sc Winner". news.abplive.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-08.
  2. "Sharada Puryanaik in Karnataka Assembly Elections 2023". News18 (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-08.
  3. Belur,DHNS, Rashmi. "Karnataka: Sharada Puryanaik named JD(S) deputy leader". Deccan Herald (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-08.
  4. Bureau, The Hindu (2023-05-04). "Shivamogga police register cases for engaging children in election campaign" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/elections/karnataka-assembly/shivamogga-police-register-cases-for-engaging-children-in-election-campaign/article66812352.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரதா_புரியாநாயக்&oldid=3908366" இலிருந்து மீள்விக்கப்பட்டது