சாரா ஓர்சுட்டு

சாரா ஓர்சுட்டு (Sarah Hörst) (பிறப்பு:26, ஏப்பிரல், 1982) ஒரு ஜான் ஆப்கின்சு பல்கலைக்கழக கோள் அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் ஆவார். இவர் கோள் வளிமண்டல அடர்பனிக்கட்டிகள் பற்றி, அதுவும் குறிப்பாக காரிக்கோளின் நிலாவாகிய் தித்தன் வளிமண்டலம் பற்றிய ஆய்வில் தன் கவனத்திக் குவித்து வருகிறார்.

சாரா ஓர்சுட்டுSarah Hörst
பிறப்புஏப்ரல் 26, 1982 (1982-04-26) (அகவை 41)
பணியிடங்கள்
  • ஜான் ஆப்கின்சு பல்கலைக்கழகம்
  • கொலொராடோ பல்கலைக்கழகம், பவுல்டர்
கல்வி கற்ற இடங்கள்
ஆய்வேடுதித்தன் வளிமண்டல வேதியியல் பற்றிய பின்னைக் காசினி ஆய்வுகள்
விருதுகள்லேடு(LAD) தொடக்கநிலைப்ப்ணி விருது

கல்வி தொகு

ஓர்சுட்டு புளோரிடாவில் உள்ள கைனெசுவில்லியில் உயர்நிலைப் ப்ள்ளியில் கல்வி கற்றார்.[1] இவரது தாயார் ஒரு நரம்பியல் வல்லுனர்; இவது தந்தையார் ஒரு மருத்துவர்.[2] இவர் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் தன் இளவல் பட்டத்தைக் கோள் அறிவியலில் பெற்றார்.[3] இவர் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் இயற்பியலாளர் மைக்கேல் பிரவுனுடன் இணைந்து செலெசுட்ரான் தொலைநோக்கியைப் பயன்படுத்தி ஐரோப்பா, தித்தன் நிலாக்களை ஆய்வு செய்தார்.[3] இந்தத் தொலைநோக்கி பயில்நிலை சார்ந்ததாக இருப்பினும் இவர் இதைக் கொண்டு தித்தன் நிலாவின் படிமத்தை உருவாக்கி அதன் ஒளி வரைவைக் கணக்கிட்டதோடு அதில் நிலவும் முகில்களையும் ஆய்வு செய்ய முயன்றார்.[4] இவர் கால்டெக் நிறுவனத்தின் கலம் பின்பற்றல் குழுவில் பணிபுரிந்துள்ளர்.[3] இவர் 2004 இல் முதுவர் பட்டம் பெற்றதும், தாரைச் செலுத்த ஆய்வகத்தில் சேர்ந்தார். அங்கு இவர் காசினி-ஐகன்சு விண்கல படிமவாக்க துணையமைப்புக்கான படிமப் பகுப்பாய்வை செய்தார்.[5] இவர் ஐபாகு (IPAG) எனும் Institut de Planétologie et d'Astrophysique de Grenoble இல் பணிபுரிந்துள்ளார். [6] இவர் அரிசோனா பல்கலைக்கழகத்தில் தன் முனைவர் பட்ட்த்தை 2011 இல் பெற்றார். இவரது முனைவர் ஆய்வின் தலைப்பு தித்தன் நிலா வளிமண்டல் வேதியியல் சார்ந்த் பின்னைக் காசினி ஆய்வு, என்பதாகும்.[7] இங்கு இவர் நிலா, கோள் ஆய்வகத்தில் பணிபுரிந்து தித்தன் வளிமண்டல வேதியியல் பற்றி ஆய்வு மேற்கொண்டார். இவரது குழு தான் தித்தன் வளிமண்டலத்தில் அமினோ அமிலங்களும் உட்கருவன் அடிநிலைகளும் நிலவியதை முதன்முதலில் கண்டு உலகுக்கு அறிவித்தது.[8] வளிமண்டல அறிவியலில் மகளிருக்கு வழங்கும் பீட்டர் வேகினர் விருதை இவர் பெற்றுள்ளார்.[2]

ஆராய்ச்சிப்பணி தொகு

இவர் 2011 இல் தேசிய வானியல், வானியற்பியல் அறக்கட்டளை முதுமுனைவர் ஆய்வு நல்கையோடு பவுல்டரில் உள்ள கொலராடோ பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்[9] இவர் 2014 இல், ஜான் ஆப்கின்சு பல்கலைக்கழகத்தில்[10] உதவி பேராசிரியராகச் சேர்ந்து கோள்களும் அவ்ற்றின் நிலாக்களும் சார்ந்த வளிமண்டலங்களின் வேதியியலில் சிறப்புத் தகைமையை வளர்த்துகொண்டார்.[11]

இவரது குழு 2018 மார்ச்சில் வேற்றுலக வளிமண்டலங்களை ஆய்வகத்தில் உருவகிக்கலாம் என்பதையும் அவற்றில் நிலவும் உறைபனிக்கட்டியின் உட்கூறுகளைக் கண்டறியலாம் என்பதையும் செயல்முறையில் விளக்கியது .[12] இந்த ஆய்வு 2021 இல் நாசா ஏவவுள்ள ஜேம்சு வெப் விண்வெளித் தொலைநோக்கி திரட்டவுள்ள தரவுகளைப் பகுத்தாய உதவும்.[13]

இவர் தித்தன் நிலாவுக்கு அனுப்பவுள்ள திரேகான்பிளை விண்கலத் திட்டத்தின் அறிவியல் தொழில்நுட்பக் குழுவிலும் பணியாற்றுகிறார்.[14]

தகைமைகளும்விருதுகளும் தொகு

இவர் 2020 இல் அமெரிக்க வானியல் கழகத்தின் ஆய்வக வானியற்பியல் கோட்ட (LAD) தொடக்கநிலை வாழ்க்கைப்பணி விருதைப் பெற்றார்.[15]

அறிவியல் எழுத்தும் பரப்பலும் தொகு

இவரது பணி குறித்த செய்திகள் சுமித்சோனியன் இதழிலும் சைசோ காட்சியிலும் பி பி சி (BBC) செய்தியிலும் வந்துள்ளன.[16][17][18][19][20] இவர் தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுடன் இணைந்து வகுப்பறையில் கோள் அறிவியல் அறிவைப் பரப்பி வருகிறார்.[21]

இவர் கோளியற் கழகத்தின் கோள் வானொலி காட்சியில் தோன்றிப் பரப்புரை செய்துள்ளார் Planetary Radio.[22]

மேற்கோள்கள் தொகு

  1. "Sarah M. Hörst". www.sarahhorst.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-05.
  2. 2.0 2.1 "Sarah Horst to receive Peter B. Wagner Memorial Award for Women in Atmospheric Sciences" (in en-gb). DRI Desert Research Institute இம் மூலத்தில் இருந்து 2018-04-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180406040416/https://www.dri.edu/newsroom/news-releases/2178-sarah-horst-to-receive-peter-b-wagner-memorial-award-for-women-in-atmospheric-sciences-. 
  3. 3.0 3.1 3.2 "Old Caltech Telescope Yields New Science | Caltech" (in en). The California Institute of Technology. http://www.caltech.edu/news/old-caltech-telescope-yields-new-science-749. 
  4. 1969-, Lorenz, Ralph (2010). Titan unveiled : Saturn's mysterious moon explored. Mitton, Jacqueline.. Princeton, N.J.: Princeton Univ. Press. பக். 52. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780691146331. இணையக் கணினி நூலக மையம்:703593875. 
  5. "Sarah M. Hörst". sarahhorst.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-05.
  6. Cyril, Szopa; Nathalie, Carrasco; Ella, Sciamma-O; Guy, Cernogora; Edith, Hadamcik; Veronique, Vuitton; Roland, Thissen; Jean-Yves, Bonnet et al. (2010). "Titan's aerosols modes of production and properties, as seen with the PAMPRE laboratory experiment" (in en). 38Th Cospar Scientific Assembly 38: 13. Bibcode: 2010cosp...38..565S. 
  7. M., Horst, Sarah (2011) (in en). Post-Cassini Investigations of Titan Atmospheric Chemistry. Bibcode: 2011PhDT.......282H. https://arizona.openrepository.com/handle/10150/145467. 
  8. "Titan's Haze May Hold Ingredients for Life" (in en). UANews. https://uanews.arizona.edu/story/titan-s-haze-may-hold-ingredients-for-life. 
  9. "Sarah Horst | NSF Astronomy and Astrophysics Postdoctoral Fellows". aapf-fellows.org (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-05.
  10. "Dr. Sarah Hörst of Department of Earth & Planetary Sciences Joins HEMI Faculty -" (in en-US). https://hemi.jhu.edu/news/dr-sarah-horst-of-department-of-department-of-earth-planetary-sciences-joins-hemi-faculty/. 
  11. "| NASA Astrobiology Institute". nai.nasa.gov. பார்க்கப்பட்ட நாள் 2018-04-05.[தொடர்பிழந்த இணைப்பு]
  12. "Johns Hopkins University Researchers Recreate Exoplanet Atmospheric Chemistry In The Lab" (in en-US). DoonWire. 2018-03-10. http://www.doonwire.com/category/news/johns-hopkins-university-researchers-recreate-exoplanet-atmospheric-chemistry-in-the-lab-18031001. 
  13. Hörst, Sarah M.; He, Chao; Lewis, Nikole K.; Kempton, Eliza M.-R.; Marley, Mark S.; Morley, Caroline V.; Moses, Julianne I.; Valenti, Jeff A. et al. (2018). "Haze production rates in super-Earth and mini-Neptune atmosphere experiments" (in En). Nature Astronomy 2 (4): 303–306. doi:10.1038/s41550-018-0397-0. பன்னாட்டுத் தர தொடர் எண்:2397-3366. Bibcode: 2018NatAs...2..303H. 
  14. "Our Team". The Johns Hopkins University Applied Physics Laboratory. 2017. பார்க்கப்பட்ட நாள் 2020-03-02.
  15. "Prizes | Laboratory Astrophysics Division (LAD)". lad.aas.org. பார்க்கப்பட்ட நாள் 2020-01-07.
  16. Daley, Jason. "Purple Haze: Alien Atmospheres Recreated In the Lab" (in en). Smithsonian. https://www.smithsonianmag.com/smart-news/purple-haze-alien-atmospheres-recreated-lab-180968460/. 
  17. SciShow Space (2018-03-16), We Found Superconductors in Meteorites!, பார்க்கப்பட்ட நாள் 2018-04-05
  18. "The Space Special, Science in Action - BBC World Service". BBC (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-05.
  19. Halton, Mary (2018-03-09). "Alien atmospheres recreated on Earth" (in en-GB). BBC News. https://www.bbc.co.uk/news/science-environment-43335368. 
  20. Loffhagen, Matthew. "Scientists Have Recreated Alien Environments Here on Earth" (in en) இம் மூலத்தில் இருந்து 2018-04-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180406040407/https://www.outerplaces.com/science/item/17986-scientists-alien-environments-earth. 
  21. "TITANic Moons and Planets: Sarah Hörst hosts Saturn Week on Real Scientists" (in en-US). Real Scientists. 2017-09-10 இம் மூலத்தில் இருந்து 2018-04-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180406055013/http://realscientists.org/2017/09/10/titanic-moons-and-planets-sarah-horst-hosts-saturn-week-on-real-scientists/. 
  22. Hörst, Sarah; Lakdawalla, Emily; Betts, Bruce; Kaplan, Matt (March 27, 2019). "Dunes, Walnut Shells, Alien Impostors and Other Worlds: A Visit with Sarah Hörst" (in ஆங்கிலம்). The Planetary Society. பார்க்கப்பட்ட நாள் 2020-03-03.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரா_ஓர்சுட்டு&oldid=3612906" இலிருந்து மீள்விக்கப்பட்டது