சாரா மத்தேயுசு

பிரிட்டானிய இயற்பியலாளர்

சாரா அன்னா மத்தேயுசு (Sarah Anna Matthews) ஒரு பிரித்தானிய இயற்பியலாளர் ஆவார். இவர் இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் பேராசிரியராகவும் சூரிய இயற்பியல் துறையில் உள்ள முல்லார்டு விண்வெளி அறிவியல் ஆய்வகத் தலைவராகவும் உள்ளார்.[1] இவர் பிரித்தானிய சூரிய இயற்பியல் கழகத் தலைவராகவும் உள்ளார்.[2]

சாரா மத்தேயுசுSarah Matthews
பிறப்புசாரா அன்னா மத்தேயுசு
தேசியம்பிரித்தானியர்
துறைவானியல்
சூரிய இயற்பியல்
பணியிடங்கள்இலண்டன் பல்கலைக்கழக கல்லூரி, முல்லார்டு விண்வெளி அறிவியல் ஆய்வகம் (1996 முதல் அண்மை வரை)

வாழ்க்கை தொகு

இவர் கிளாசுக்கோ பல்கலைக்கழகத்தில் 1996 இல் இளவல் பட்டம் பெற்றார். அங்கே சூரியத் தழல்வீச்சில் ஆய்வு மேற்கொண்டு சான் கேம்பல் பிரவுனின் வழிகாட்டுதலில் முனைவர் பட்டம் பெற்றார். இவர் 1996 இல் சூரிய, எல்லியக்கோள நோக்கீட்டகத் திட்ட்த்தில் பணிபுரிய MSSL இல் சேர்ந்தார். பிறகு அங்கே சூரிய இயற்பியல் குழுவில் விரிவுரையாளராகவும் உயர்விரிவுரையாளராகவும் பேராசிரியரகவும் ஆனார். இவர் இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் கல்வி இயக்குநராகவும் முதுபட்ட விண்வெளி அறிவியல், பொறியியல் துறையின் திட்ட இயக்குநராகவும் இருந்தார்.[3]

ஆராய்ச்சி தொகு

இவர் சூரிய இயற்பியல் புலத்தில் பின்வரும் பல்வேறு பிரிவுகளில் ஆராய்ச்சி செய்ய ஆர்வம் காட்டினார்.

  • சூரிய வளிமண்டலக் காந்தப் புலத்தின் ஆற்றலைத் தேக்குதலும் பயன்படுத்தலும்.
  • செயல்முனைவு பகுதியின் கட்டமைப்பும் படிமலர்ச்சியும்.
  • சூரியத் தழலின் தொடக்கமும் படிமலர்ச்சியும் சூரிய ஒளிமுகட்டு பொருண்மை வெளியேற்றம்.
  • சூரிய நிலநடுக்க உருவாக்க இயங்கமைப்பும் சூரிய நிலநடுக்கவியலும்.
  • சூரிய ஆற்றல் துகள்களின் முடுக்கமும் விண்வெளிக் காலநிலையும்.
  • தொலைவிட உணர்தல் நோக்கீடுகளுக்கன தரை, விண்வெளிக் கருவிகள்.

விண்வெளித் திட்டங்கள் தொகு

  • இவர் கினோடு விண்கல படிமவாக்கக் கதிர்நிரலியின் முதன்மை ஆட்வாளர் ஆவார்.
  • இவர் சூரிய வட்டணை விண்கலப் படிமவாக்கி, கதிர்நிரலி கருவிகளின் இணை ஆய்வாளரும் ஆவார் [4]

விருதுகள் தொகு

  • இவர் 2020 இல் சேமுசு துங்கே விரிவுரையாளர் தகைமையைப் பெற்றார்.[5][6]

மேற்கோள்கள் தொகு

  1. UCL (2018-11-20). "Prof. Sarah Matthews". UCL Department of Space and Climate Physics. பார்க்கப்பட்ட நாள் 2020-05-11.
  2. "About UKSP | UK Solar Physics". பார்க்கப்பட்ட நாள் 2020-05-11.
  3. "Sarah Matthews". SOLARNET.{{cite web}}: CS1 maint: url-status (link)
  4. Knapton, Sarah (2020-02-09). "How the British-built Solar Orbiter's mission of discovery will make a giant leap in our understanding of the Sun". The Telegraph. https://www.telegraph.co.uk/science/2020/02/09/comes-sun-british-built-probe-heads-centre-solar-system/. 
  5. "RAS Awards 2020". Astronomy & Geophysics 61 (1): 1.9–1.10. 2020-02-01. doi:10.1093/astrogeo/ataa004. பன்னாட்டுத் தர தொடர் எண்:1366-8781. https://academic.oup.com/astrogeo/article/61/1/1.9/5719411. 
  6. UCL (2020-01-15). "Prof. Sarah Matthews named James Dungey Lecturer in RAS 2020 Awards". UCL Department of Space and Climate Physics. பார்க்கப்பட்ட நாள் 2020-05-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரா_மத்தேயுசு&oldid=3590715" இலிருந்து மீள்விக்கப்பட்டது