சாரி ஆறு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சாரி ஆறு, 940 கிமீ நீண்ட தூரமுடைய நடு ஆப்பிரிக்காவில் பாயும் ஆறாகும்.
புவியியல்
தொகுசாரி ஆறு மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் இருந்து சாட் நாட்டின் வழியே சாட் ஏரிக்கு பாய்கிறது. சாட்டின் தலைநகரும் பெரிய நகருமான இன்சாமனா என்ற இடத்தில் இதன் முதன்மை துணை ஆறாகிய லோகோன் ஆறு உடன் இணைகிறது. அவ்விடத்திலிருந்து சாட் ஏரியில் கலக்கும் வரை சாட்டுக்கும் கேமரூனுக்கும் எல்லையாக உள்ளது.
சாட் ஏரியின் 90 விழுக்காடு நீர் சாரி ஆற்றின் மூலமே கிடைக்கிறது. இதன் வடிகால் பகுதி 548,747 சதுர கிமீ பரப்பு உடையது. இதற்கு லோகோன் தவிர பகர் அஉக் பகர் சலாமட் பகர் கெய்ட்டா போன்ற மற்ற சிறு துணை ஆறுகளும் உண்டு.
சாட் நாட்டின் மக்கள் தொகையில் பெரும்பாலானவர்கள் இன்சாமனாவிலும் சாரே நகரங்களிலும் வாழ்கிறார்கள். இவ்விரு நகரங்களும் சாரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளன.
2016ஆம் ஆண்டிலும் சாட் கினி புழு கொள்ளை நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இருந்தது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் சாரி ஆற்றின் கரையோரத்திலேயே இருந்தனர். உள்ளூர் மக்களின் மீன் பிடிக்கும் தொழிலுக்கு சாரி ஆறு முதன்மையான ஆதாரமாகும். நைல் பெர்ச் என்கிற மதிப்புள்ள மீன் இங்கு கிடைக்கும்.