சாருலதா (1964 திரைப்படம்)

சாருலதா (Charulata) சத்யஜித் ராய் எழுதி இயக்கி 1964 ஆம் ஆண்டு வெளிவந்த வங்காள மொழித் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் சௌமித்ர சாட்டர்ச்சீ, மாதபி முகர்ச்சீ மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் சத்யஜித் ராயின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது மற்றும் இதுவரை தயாரிக்கப்பட்ட சிறந்த படங்களின் பட்டியலிலும் அடிக்கடி இடம்பெற்றுள்ளது.

சாருலதா
இயக்கம்சத்யஜித் ராய்
தயாரிப்புஆர்.டி.பி நிறுவனம்
கதைசத்யஜித் ராய்
ரபிந்திரநாத் தாகூர் (நாவல்)
நடிப்புசௌமித்ரா சாட்டர்ஜீ,
மாதபி முகர்ஜீ,
சைலென் முகர்ஜி,
சியாமல் கோஷ்
விநியோகம்எட்வர்ட் ஹரிசன்
வெளியீடு1964
ஓட்டம்117 நிமிடங்கள்
மொழிவங்காள மொழி

முதல் மற்றும் கடைசி காட்சிகள் இரண்டுமே விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது. ஏறக்குறைய எந்த உரையாடலும் இல்லாத முதல் காட்சி, சாருவின் தனிமையையும் அவள் பைனாகுலர் மூலம் வெளி உலகத்தைப் பார்ப்பதையும் காட்டுகிறது. கடைசிக் காட்சியில் சாருவும் அவள் கணவரும் நெருங்கி வந்து கைகளைப் பிடிக்கப் போகும் போது திரை உறைகிறது. இக்காட்சி திரை உலகில் ஓர் அழகான பயன்பாடு என்று விவரிக்கப்பட்டுள்ளது..[1]

விருதுகள்

தொகு
  • 1965 ஆம் ஆண்டில் வெளிவந்த படங்களுக்கான இந்திய அரசின் தேசிய திரைப்பட விருதான வெண்தாமரை விருதினைப் பெற்றது இத்திரைப்படம்.
  • வெள்ளிக் கரடி விருதினை சிறந்த இயக்கத்திற்காக பெர்லினில் இத்திரைப்படம் 1964 ஆம் ஆண்டில் பெற்றது.

அகாடமி திரைப்படக் காப்பகம் 1996 ஆம் ஆண்டில் சாருலதா திரைப்படத்தைப் பாதுகாத்தது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Ray, Satyajit (2015). Prabandha Sangraha. Kolkata: Ananda Publishers. pp. 43–48. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5040-553-6.
  2. "Preserved Projects". Academy Film Archive. Archived from the original on 15 August 2016. பார்க்கப்பட்ட நாள் 11 August 2016.

மேலும் வாசிக்க

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாருலதா_(1964_திரைப்படம்)&oldid=4065020" இலிருந்து மீள்விக்கப்பட்டது