சார்டைட்டு
சார்டைட்டு (Shortite) என்பது சோடியம்-கால்சியம் கார்பனேட்டு கனிமம் ஆகும். Na2Ca2(CO3)3 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் இது அடையாளப்படுத்தப்படுகிறது. அமெரிக்காவின் வயோமிங் மாநிலத்தில் சுவீட்வாட்டர் மாகாணத்தில் பச்சை ஆறு உருவாக்கத்தின் போது கிடைத்த வெட்டுக்கற்களில் யே.யே.பாகே என்பவரால் இக்கனிமம் கண்டறியப்பட்டது. 1889-1952 ஆம் ஆண்டு காலத்தில் அரிசோனா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த கனிமவியலாளர் பேராசிரியர் மேக்சுவெல் என். சார்ட்டு என்பவர் நினைவாக இக்கனிமத்திற்கு சார்டைட்டு என பெயர் சூட்டப்பட்டது. கனிமவியலாளர்கள் சங்கம் Sot என்ற குறியீட்டால் இக்கனிமத்தை அடையாளப்படுத்துகிறது.[1]
சார்டைட்டு Shortite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | கார்பனேட்டு கனிமம் |
வேதி வாய்பாடு | Na2Ca2(CO3)3 |
இனங்காணல் | |
படிக அமைப்பு | நேர்ச்சாய்சதுரம் |
பிளப்பு | தனித்து/{010} இல் சரி பிளவு |
முறிவு | சங்குருவம் |
மோவின் அளவுகோல் வலிமை | 3 |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகும் |
ஒப்படர்த்தி | 2.6 |
அடர்த்தி | 2.6 |
ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (−) |
ஒளிவிலகல் எண் | nα = 1.531 nβ = 1.555 nγ = 1.570 |
இரட்டை ஒளிவிலகல் | 0.039 |
நிறப்பிரிகை | r < v மிதமாக |
பன்னாட்டு கனிமவியல் சங்கம் சார்டைட்டு கனிமத்தை Sot[2] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
திரோனா எனப்படும் முச்சோடியம் ஐதரசன் இருகார்பனேட்டு இருநீரேற்று கனிமங்களுடன் சேர்ந்து சார்டைட்டு கனிமம் காணப்படுகிறது. கச்சா திரோனாவைப் பயன் படுத்தும் போது அது சார்டைட்டு கனிமம் மூலம் மாசுபடுவதைத் தவிர்க்க சிறிதளவு கவனமாக இருக்க வேண்டும்.[3]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.
- ↑ McKetta, John J. (1995) "Slurry Systems, Instrumentation to Solid–Liquid Separation", Encyclopedia of Chemical Processing and Design, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8247-2602-2