சார்லசின் விதி
சார்லசின் விதி (கனவளவு விதி என்றும் அறியப்படுகிறது) ஒரு பரிசோதனை வாயு விதி ஆகும். இது வாயுக்களை வெப்பமாக்கும் போது எவ்வாறு விரிவடைய முனைகின்றன என்பதை விளக்குகிறது.

சார்லசின் விதியினைப் பற்றிய தற்காலத்தைய கூற்று:
நிலையான அமுக்கத்தில் குறித்த திணிவு வாயுவின் கனவளவானது, தனிவெப்பநிலை அளவுகோல் வெப்பநிலையின் அதே காரணியினால் அதிகரிக்கும் அல்லது குறைவடையும் (அதாவது வெப்பநிலை அதிகரிப்பிற்கேற்ப வாயு விரிவடையும்).[1]
இது பின்வருமாறு எழுதப்படலாம்:
இங்கு V என்பது வாயுவின் கனவளவு; T என்பது தனிவெப்பநிலை. இவ்விதியினை பின்வருமாறும் வெளிப்படுத்தலாம்:
இச்சமன்பாடானது தனிவெப்பநிலை அதிகரிக்கும் போது அதற்கு நேர்விகித சமனாக வாயுவின் கனவளவும் அதிகரிக்கும் என்பதைக் காட்டுகிறது.
மேற்கோள்களும் குறிப்புக்களும் தொகு
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value)..