சார்லசு கோர்ரியா

சார்லசு கோர்ரியா (Charles Correa, 1 செப்டம்பர் 1930 – 16 சூன் 2015) இந்திய கட்டிடக் கலைஞரும் ஊரக திட்டமிடுபவரும் செயற்பாட்டாளரும் ஆவார். விடுதலைக்குப் பிறகான இந்தியாவின் கட்டிடக்கலையில் தற்கால கட்டிடக்கலை நுட்பங்களை அறிமுகப்படுத்தியதில் இவரது தாக்கம் குறிப்பிடத்தக்கதாகும். நகர்ப்புற ஏழைகளின் தேவைகளைக் குறித்த விழிப்புணர்வை உருவாக்கியவராகவும் பழமையான கட்டிடக்கலை நுட்பங்களையும் பொருட்களையும் தமது படைப்புகளில் பயன்படுத்தியவராகவும் பெரிதும் அறியப்படுகின்றார்.[1]

சார்லசு கோர்ரியா
தனிப்பட்ட விவரங்கள்
நாட்டினம்இந்தியர்
பிறப்பு(1930-09-01)1 செப்டம்பர் 1930
சிக்கந்தராபாத், தெலுங்கானா, இந்தியா
இறப்பு16 சூன் 2015(2015-06-16) (அகவை 84)
மும்பை, இந்தியா
பாடசாலைபுனித சேவியர் கல்லூரி, மும்பை
மிச்சிகன் பல்கலைக்கழகம்
மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம்
பணி
கட்டிடங்கள்சவகர் கலா கேந்திரம், தேசிய கைவினை அருங்காட்சியகம், பாரத பவன்,
விருதுகள்பத்மசிறீ, பத்ம விபூசண்
சவகர் கலா கேந்திரம், செய்ப்பூர்
சபர்மதி ஆசிரமத்தில் மகாத்மா காந்தி நினைவகம்

இந்திய அரசு இவருக்கு 1972இல் பத்மசிறீ விருதும் 2006இல் பத்ம விபூசண் விருதும் வழங்கிக் கௌரவித்துள்ளது. பிரித்தானியக் கட்டிடக்கலைஞர்களுக்கான அரச சங்கம் 1984ஆம் ஆண்டில் இவருக்கு கட்டிடக்கலைக்கான அரச தங்கப் பதக்கத்தை வழங்கியுள்ளது.

கோர்ரியா தமது 84ஆம் அகவையில் நோய்வாய்ப்பட்டு மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் மரணமடைந்தார்.[2]

மேற்சான்றுகள் தொகு

  1. An Architecture of Independence: The Making of Modern South Asia பென்சில்வேனியா பல்கலைக்கழகம்.
  2. Malhotra, Aditi (June 17, 2015). "India's 'Greatest Architect,' Charles Correa, Dies". Wall Street Journal.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்லசு_கோர்ரியா&oldid=3434262" இலிருந்து மீள்விக்கப்பட்டது