சார்லட் டக்ளஸ் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Charlotte Douglas International Airport, (ஐஏடிஏ: CLT, ஐசிஏஓ: KCLT, எப்ஏஏ LID: CLT)) ஐக்கிய அமெரிக்காவின் வட கரொலினா மாநிலத்தில் சார்லட்டில் அமைந்துள்ள குடிசார்-படைசார் கூட்டு பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். 1935இல் சார்லட் நகராட்சி வானூர்தி நிலையமாக நிறுவப்பட்ட இந்த நிலையம் 1954இல் சார்லட் மேயராக இருந்த பென் எல்பெர்ட் டக்ளஸ் நினைவாக டக்ளஸ் நகராட்சி வானூர்தி நிலையமாக பெயர் மாற்றப்பட்டது. 1982இல் இதன் தற்போதைய பெயருக்கு மாற்றப்பட்டது. இது யுஎஸ் ஏர்வேசின் மிகப்பெரும் முனைய நடுவமாக விளங்குகிறது. 2008இல் இங்கிருந்து 175 சேரிடங்களுக்கு உள்ளூர் மற்றும் பன்னாட்டு சேவைகள் இயக்கப்பட்டன.[3] 2009இல் ஐக்கிய அமெரிக்க நாட்டில் 9வது போக்குவரத்து மிகுந்த நிலையமாக இருந்தது.[4] 2012இல் உலகின் 23வது மிகுந்த பயணிகள் போக்குவரத்து உடைய வானூர்தி நிலையமாக இருந்தது.[5]
சார்லட் டக்ளஸ் பன்னாட்டு வானூர்தி நிலையம் |
---|
|
|
சுருக்கமான விபரம் |
---|
வானூர்தி நிலைய வகை | பொதுத்துறை |
---|
உரிமையாளர் | சார்லெட்டு நகரம் |
---|
இயக்குனர் | சார்லட், வட கரொலைனா |
---|
சேவை புரிவது | சார்லெட் பெருநகரப் பகுதி |
---|
அமைவிடம் | சார்லெட், வட கரொலினா, ஐக்கிய அமெரிக்கா |
---|
மையம் | யுஎஸ் ஏர்வேஸ் |
---|
உயரம் AMSL | 748 ft / 228 m |
---|
இணையத்தளம் | www.charlotteairport.com |
---|
ஓடுபாதைகள்
|
---|
திசை
|
நீளம்
|
மேற்பரப்பு
|
அடி
|
மீட்டர்
|
18L/36R
|
8,676
|
2,644
|
அசுபால்ட்டு/பைஞ்சுதை
|
18C/36C
|
10,000
|
3,048
|
பைஞ்சுதை
|
18R/36L
|
9,000
|
2,743
|
பைஞ்சுதை
|
5/23
|
7,502
|
2,287
|
அசுபால்ட்டு/பைஞ்சுதை
|
|
புள்ளிவிவரங்கள் (2012) |
---|
பயணிகள் | 41,228,372 |
---|
வானூர்தி இயக்கங்கள் | 552,093 |
---|
|
|