சார்லஸ் சி. மன்

சார்லஸ் சி. மன் (Charles C. Mann) (பிறப்பு 1955)[1]ஒரு அமெரிக்க பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். "1491:நியூ ரெவீலேஷன்ஸ் ஆஃப் தி அமெரிக்காஸ் பிஃபோர் கொலம்பஸ்" என்ற அவரது நூலானது தேசிய அகாதெமிக்களின் ஆண்டின் சிறந்த புத்தகத்திற்காக விருதினை வென்றது. அவர் சயின்ஸ் (பருவ இதழ்), தி அட்லாண்டிக் மன்த்லி, வயர்ட் (செய்தி இதழ்) ஆகியவற்றின் இணை ஆசிரியராக இருந்துள்ளார்

சார்லசு சி. மான்
பிறப்பு1955
தொழில்பத்திரிக்கையாளர், நூலாசிரியர்
மொழிஆங்கிலம்
குடியுரிமைஅமெரிக்க ஐக்கிய நாடுகள்
கல்வி நிலையம்ஆமெர்ஸ்ட் கல்லூரி
வகைஅறிவிக்கை
குறிப்பிடத்தக்க படைப்புகள்
  • 1491:நியூ ரெவீலேஷன்ஸ் ஆஃப் தி அமெரிக்காஸ் பிஃபோர் கொலம்பஸ்
  • 1493: அன்கவரிங் தி நியூ வேர்ல்ட் கொலம்பஸ் கிரியேடட்
குறிப்பிடத்தக்க விருதுகள்நேஷனல் அகாதெமிஸ் கம்யூனிகேசன் விருது
நேஷனல் செய்தி இதழ் விருது(இறுதிப்போட்டியாளர்)

வாழ்க்கை வரலாறு தொகு

மான், ஃபார்ச்சூன் இதழ், த நியூயார்க் டைம்ஸ், இசுமித்சோனியன் (செய்தி இதழ்), டெக்னாலச்சி ரிவ்யூ, வேனிடி ஃபேர் (செய்தி இதழ்), மற்றும் தி வாசிங்டன் போஸ்ட் ஆகிய பத்திரிக்கைகளுக்காக எழுதியுள்ளார்.[2]2005 ஆம் ஆண்டில் 1491: நியூ ரெவிலேஷன்ஸ் ஆப் தி அமெரிக்காஸ் பிஃபோர் கொலம்பஸ், என்ற நூலையும் அதைத் தொடர்ந்து 2011 ஆம் ஆண்டில் 1493: அன்கவரிங் தி நியூ வேர்ல்ட் கொலம்பஸ் கிரியேடட் என்ற நூலையும் எழுதினார்.[3] 2012 ஆம் ஆண்டில் வில்சன் இலக்கிய அறிவியல் எழுத்திற்கான விருதினைத் தேர்ந்தெடுக்கும் அமைப்பிற்கு நடுவராகப் பணியாற்றினார். [4]

மேற்கோள்கள் தொகு

  1. Date information sourced from Library of Congress Authorities data, via corresponding WorldCat Identities linked authority file (LAF).
  2. Mann, Charles C. (2011). 1493: Uncovering the New World Columbus Created. New York: Alfred A. Knopf. பக். 537: A Note About the Author. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-307-26572-2. https://archive.org/details/1493uncoveringne00mann/page/537. 
  3. "The World Columbus Created". RadioWest website. பார்க்கப்பட்ட நாள் May 29, 2012.
  4. "Announcing the 2012 PEN Literary Award Recipients". PEN American Center. October 15, 2012. பார்க்கப்பட்ட நாள் February 6, 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்லஸ்_சி._மன்&oldid=2954746" இலிருந்து மீள்விக்கப்பட்டது