சார்ல்ஸ் தாம்சன் ரீசு வில்சன்
சார்ல்சு தாம்சன் ரீஸ் வில்சன் (Charles Thomson Rees Wilson, 14 பெப்ரவரி 1869 – 15 நவம்பர் 1959) என்பவர் இசுக்கொட்லாந்தைச் சேர்ந்த இயற்பியலாளரும், வானிலையாளரும் ஆவார். முகிலறையைக் கண்டுபிடித்தமைக்காக 1927 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு இவருக்குக் கிடைத்தது.
சி. டி. ஆர். வில்சன் C. T. R. Wilson | |
---|---|
1927 இல் வில்சன் | |
பிறப்பு | சார்ல்சு தாம்சன் ரீசு வில்சன் 14 பெப்ரவரி 1869 மிட்லோத்தியன், இசுக்கொட்லாந்து |
இறப்பு | 15 நவம்பர் 1959 எடின்பரோ, இசுக்கொட்லாந்து | (அகவை 90)
தேசியம் | இசுக்காட்டியர் |
துறை | இயற்பியல் |
பணியிடங்கள் | கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | மான்செஸ்டர் பல்கலைக்கழகம் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் |
கற்கை ஆலோசகர்கள் | ஜெ. ஜெ. தாம்சன் |
முனைவர் பட்ட மாணவர்கள் | சிசில் பிராங்கு பவெல் |
அறியப்படுவது | முகிலறை |
விருதுகள் | அவார்டு என். பொட்சு விருத்து (1925) இயற்பியலுக்கான நோபல் பரிசு 1927 பிராங்கிளின் விருது1929 |
வாழ்க்கைச் சுருக்கம்
தொகுவில்சன் இசுக்கொட்லாந்தில் மிட்லோத்தியன் என்ற ஊரில் ஜோன் வில்சன், அன்னி கிளர்க் ஆகியோருக்குப் பிறந்தவர். தந்தை ஒரு விவசாயி. 1873 ஆம் ஆண்டில் தந்தை இறக்கவே, இவரது குடும்பம் மான்செஸ்டருக்கு இடம்பெயர்ந்தது. ஓன்சு கல்லூரியில், உயிரியல் பட்டப் படிப்பை மேற்கொண்டார். பின்னர் கேம்ப்ரிட்ச், சிட்னி சசெக்சு கல்லூரியில் இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களைக் கற்றார்.[1]
பின்னர் இவர் வானிலையியலில் விருப்பம் கொண்டு, 1893 இல் முகில் மற்றும் அதன் இயல்புகளை ஆராய்ந்தார். பென் நெவிசு என்ற இடத்தில் உள்ள வானியல் அவதான நிலையத்தில் பணியாற்றும் போது முகில்த் தோற்றம் பற்றி அவதானித்தார். இதனை அவர் பின்னர் கேம்பிரிட்சில் உள்ள ஆய்வுகூடத்தில் சிறிய அளவில் அடைக்கப்பட்ட கலன் ஒன்றில் ஈரப்பதன் கொண்ட வளிமம் மூலம் சோதித்தார். பின்னர் அயனிகளாலும், கதிர்வீச்சினாலும் ஏற்படக்கூடிய முகிற்சுவடுகளை அவதானித்தார். தனது முகிலறை கண்டுபிடிப்புக்காக இவருக்கு 1927 ஆம் ஆண்டில் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Wilson, Charles Thomson Rees in Venn, J. & J. A., Alumni Cantabrigienses, கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம், 10 vols, 1922–1958.
- Asimov's Biographical Encyclopedia of Science and Technology, Isaac Asimov, 2nd ed., Doubleday & C., Inc., பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-385-17771-2.
வெளி இணைப்புகள்
தொகு- Charles Thomson Rees Wilsons biography பரணிடப்பட்டது 2004-08-03 at the வந்தவழி இயந்திரம்