சாலைகள் மற்றும் ராச்சியங்களின் புத்தகம்

பாரசீகப் புவியியலாளர் இபின் கோர்தாத்பே என்பவரால் எழுதப்பட்ட புவியியல் உரை

சாலைகள் மற்றும் ராச்சியங்களின் புத்தகம் ( Book of Roads and Kingdoms ) என்பது பாரசீகப் புவியியலாளர் இபின் கோர்தாத்பே என்பவரால் எழுதப்பட்ட 9 ஆம் நூற்றாண்டின் புவியியல் உரையாகும். இது முஸ்லிம் உலகில் அக்காலத்தின் முக்கிய வர்த்தக வழிகளை வரைபடமாக்கி விவரிக்கிறது. மேலும், யப்பான், கொரியா மற்றும் சீனா போன்ற தொலைதூர வர்த்தகப் பகுதிகளைப் பற்றியும் விவாதிக்கிறது.[1] இது கி.பி. 870 இல், அப்பாசியக் கலிபகத்தின் அல்-முதாமித் ஆட்சியின் போது எழுதப்பட்டது. அதே நேரத்தில் இதன் ஆசிரியர் நவீன ஈரானில் உள்ளசிபால் என்ற மாகாணத்தில் அஞ்சல் மற்றும் காவல்துறை இயக்குநராக இருந்தார்.

See caption
சாலைகள் மற்றும் ராச்சியங்களின் புத்தகத்தில் இரதானியர்களின் வர்த்தக வலையமைப்பின் வரைபடம்.

இந்த நூல் பாரசீக நிர்வாக விதிமுறைகளைப் பயன்படுத்துகிறது, இஸ்லாமியத்திற்கு முந்தைய ஈரானிய வரலாற்றில் கணிசமான கவனம் செலுத்துகிறது. மேலும் "உலகின் பூர்வீக ஈரானிய அண்டவியல் பிரிவு அமைப்பைப்" பற்றிக் கூறுகிறது. இவை அனைத்தும் "இப்பணியின் மையத்தில் ஈரானிய ஆதாரங்களின் இருப்பை" காட்டுகின்றன. [2]

தொலெமி, கிரேக்கம் மற்றும் இசுலாமியத்திற்கு முந்தைய ஈரானிய வரலாறு ஆகியவை இந்த நூலில் தெளிவான செல்வாக்கைக் கொண்டுள்ளன.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Isabella Bird (9 January 2014). "1". Korea and Her Neighbours.: A Narrative of Travel, with an Account of the Recent Vicissitudes and Present Position of the Country. With a Preface by Sir Walter C. Hillier. Adegi Graphics LLC. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-543-01434-4.
  2. 2.0 2.1 Meri, Josef W.; Bacharach, Jere (2005). Medieval Islamic Civilization: An Encyclopedia. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-96690-6. pp. 359–60.

வெளி இணைப்புகள்

தொகு