சாலை, திருவனந்தபுரம்

சாலை அல்லது சாலை சந்தை (Chala or Chalai bazaar) என்பது இந்தியாவின் கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு பழைய வணிகப் பகுதியாகும்.

வரலாறு

தொகு
 
திருவனந்தபுரத்தின் கடைவீதி (பக் .102, 1891), இலண்டன் மிஷனரி சொசைட்டி [1]

18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் திருவிதாங்கூரின் திவான் இராஜா கேசவதாசு என்பவரால் இந்த சாலை அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. திருவிதாங்கூர் இராச்சியத்திற்கு பொருட்கள் வழங்குவதற்கான மையப் புள்ளியாக சாலை சந்தையை உருவாக்குவது அவரது யோசனையாக இருந்தது. அருகிலுள்ள கிள்ளி, கரமனை ஆறுகள் சந்தைக்கு பொருட்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டன. திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலின் மதில் சுவற்றின் பதிவுகள் கோயிலுக்கு அருகில் 'இருந்த' ஒரு பெரிய சந்தை இடத்தைப் பற்றி பேசுகின்றன. 13 ஆம் நூற்றாண்டுக்கு குறைந்தது ஒன்றரை நூற்றாண்டுக்கு முன்பே இதன் தரவுகள் செல்கிறது. மேலும், தலைநகரத்தை விரிவாக்கும் 'அனந்தபுரவர்ணம்' என்ற அமைப்பு, ஒரு மீன் சந்தை, துணி சந்தை, பொருட்கள் சந்தை மற்றும் பல பொருட்களைக் கொண்ட ஒரு சந்தையைப் பற்றி தெளிவாக விவரிக்கிறது. வணிகர்கள் சந்தையில் வர்த்தகம் செய்ய கப்பல்களில் வந்ததாகவும் இக்கல்வெட்டு கூருகிறது. [2]

இடம்

தொகு

அனைத்து நகர பேருந்துகளும் நிறுத்தப்படும் கிழக்குக் கோட்டை மத்தியப் பேருந்து நிலையத்துக்கு எதிரே சாலை சந்தை அமைந்துள்ளது. இதன் பிரதான நுழைவாயில் காந்திப் பூங்காவிற்கும் கேரள மாநில போக்குவரத்துக் கழகத்தின் பேருந்து பணிமனைக்கும் இடையிலான சந்திப்பில் அமைந்துள்ளது. இந்த நுழைவாயில் பிரதான வணிகப் பகுதியான சாலை சந்தைக்கு அழைத்துச் செல்கிறது. இந்த சாலை கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் (முன்னர் அறியப்பட்ட தேசிய நெடுஞ்சாலை எண் 47, இப்போது தே. நெ. எண் -66 என மறுபெயரிடப்பட்டது) சுமார் 1.5 கி.மீ தூரத்தில் முடிவடைகிறது.

வணிகத் தெரு

தொகு

கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச் செல்லும் கிள்ளி பாலம், கிழக்கு கோட்டையை இணைக்கும் குறுகிய 2 கி.மீ சாலை வழியாக சந்தை பரவுகிறது. வணிகத் தெருவில் கருப்பட்டிகடா ஜும்மா மசூதி ஒன்று உள்ளது. இது பிரபலமாக 'சாலை ஜும்மா மசூதி' என்று அழைக்கப்படுகிறது. இந்த ஜும்மா மசூதி 20 ஆம் நூற்றாண்டின் முதல் காலாண்டில் கட்டப்பட்டது. இது மாவட்டத்தின் பழமையான மசூதிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

கடைகள்

தொகு

சந்தை பழங்கள், காய்கறிகள், தங்கம், வெள்ளி முதல் வண்ணப்பூச்சு, வன்பொருள் வரை கிட்டத்தட்ட ஒவ்வொரு பொருளையும் விற்கிறது. ஞாயிற்றுக்கிழமை தவிர பெரும்பாலான கடைகள் தினமும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். இந்த இடம் மாலையில் மிகவும் நெரிசலானதாகக் காணப்படும். பல நல்ல உணவகங்களும் இப்பகுதியில் அமைந்துள்ளன. இதன் 2 கி.மீ நீளம் கேரளாவின் பரபரப்பான வணிகத் தெருக்களில் ஒன்றாகும். 1970 இல் தொடங்கிய முபாரக் உணவு விடுதி சாலையின் மிகப் பழமையான உணவகங்களில் ஒன்றாகும். மற்றொரு குறிப்பிடத்தக்க கடை சுவாமி அன்ட் பிரதர்ஸ் ஆஃப் சாலை என்பதாகும். முன்பு அனைத்து விதமான நூல்கள், எம்பிராய்டரி சாதனங்கள், ஆடைப் பொருட்களுக்கான இடமாக இருந்த ஒரு கடை 2015 இல் மூடப்பட்டது.

அதிக விற்பனையாகும் காலங்கள்

தொகு

விஷூ, ஓணம், கிறிஸ்துமஸ் பண்டிகைகளின் போது இங்கு அதிகம் வியாபாரம் நடக்கிறது. ஓணம் திருவிழாவின் போது பார்க்க வேண்டிய ஒரே இடம் சாலை சந்தை, ஏனென்றால் இங்கு தான் கொண்டாட்டத்திற்கு தேவையான அனைத்து வகையான பூக்களும் கிடைக்கும். ஓணத்தின் போது 10,000 கிலோவுக்கும் அதிகமான பூக்கள் சாலை சந்தையில் காணப்படும். [3]

குறிப்புகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாலை,_திருவனந்தபுரம்&oldid=3006342" இலிருந்து மீள்விக்கப்பட்டது