சால் பெல்லோ
சவுல் பெல்லோ (Saul Bellow) என்பவர் ஒரு கனடிய-அமெரிக்க எழுத்தாளர் ஆவார். இவர் 1915 ஆம் ஆண்டு சூன் மாதம் 10 ஆம் நாள் பிறந்தார். இவரது இயற்பெயர் சாலமன் பெல்லோசு என்பதாகும். இலக்கியப் பணிகளுக்காக பெல்லோவுக்கு புலிட்சர் பரிசு, இலக்கியத்திற்கான நோபல் பரிசு, மற்றும் தேசிய கலைப் பதக்கம் ஆகியன வழங்கப்பட்டன[1]. புனைகதைக்கான தேசிய புத்தக விருதை மூன்று முறை வென்ற ஒரே எழுத்தாளர் பெல்லோ மட்டுமே என்பது இவரது சிறப்பாகும்[2].மேலும் 1990 ஆம் ஆண்டில் தேசிய புத்தக அறக்கட்டளையின் வாழ்நாள் சாதனையாளர் பதக்கத்தைப் பெல்லோ பெற்றார். [3].
சவுல் பெல்லோ Saul Bellow | |
---|---|
சோரான் டுசிக் வரைந்த சவுல் பெல்லோ ஓவியம் | |
பிறப்பு | சாலமன் பெல்லோசு 10 சூன் 1915 லாச்சின், கியூபெக்,கனடா |
இறப்பு | 5 ஏப்ரல் 2005 புரூக்ளின், மாசச்சூசெட்ஸ், அமெரிக்கா. | (அகவை 89)
தொழில் | எழுத்தாளர் |
தேசியம் | கனடிய - அமெரிக்கர் |
கல்வி நிலையம் | சிக்காகோ பல்கலைக்கழகம் வடமேற்கு பல்கலைக்கழகம் விசுகொன்சின் பல்கலைக்கழகம் |
குறிப்பிடத்தக்க விருதுகள் | இலக்கியத்திற்கான நோபல் பரிசு 1976 , புலிட்சர் பரிசு 1976, புனைகதைக்கான தேசிய புத்தக விருது 1954, 1965,, 1971, கலைக்கான தேசியப் பதக்கம் |
துணைவர் | அனிதா கோசுகின், அலெக்சாண்டிரா, சூசன் கிளாசுமான்,அலெக்சாண்டிரா பெல்லோவ், யானிசு பிரீட்மான் |
கையொப்பம் | |
கல்வி மற்றும் ஆரம்பகால வாழ்க்கை
தொகுபெல்லோ சிகாகோ பல்கலைக்கழகத்தில் பயின்றார். பின்னர் அமெரிக்காவின் வடமேற்கு பல்கலைக்கழகத்தில் பயின்றார். முதலில் இலக்கியம் படிக்க விரும்பிய இவர் ஆங்கிலத் துறை யூத எதிர்ப்பு என்று உணர்ந்ததால் மானுடவியல் பிரிவில் பட்டம் பெற்றார்[4] பெல்லோவின் மானுடவியல் பற்றிய ஆய்வு அவரது இலக்கிய நடையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. பிற்காலத்தில் விசுகான்சின் பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம் பெற்றார்.
1930 களில், பெல்லோ படைப்புகள் முன்னேற்ற நிர்வாக பிரிவு எனும் எழுத்தாளர் திட்டத்தின் சிகாகோ கிளையின் ஓர் அங்கமாக இருந்தார். இதில் எதிர்கால சிகாகோ இலக்கிய எழுத்தாளர்களான ரிச்சர்ட் ரைட் மற்றும் நெல்சன் ஆல்கிரென் ஆகியோர் அடங்குவர்.
பெல்லோ குழந்தைப் பருவத்திலேயே சட்டவிரோதமாக அமெரிக்காவிற்கு குடியேறியவர் என்றாலும் 1941 ஆம் ஆண்டில், அமெரிக்க குடிமகனாக ஆனார்.[5] 1943 ஆம் ஆண்டில், மாக்சிம் லிபர் அவரது இலக்கிய முகவராக இருந்தார். இரண்டாம் உலகப் போரின்போது, பெல்லோ அமெரிக்க கடற்படையில் சேர்ந்தார். தனது பணிகாலத்தின் போது முதல் புதினமான டாங்லிங் மேன் (1944) என்ற நூலை எழுதி முடித்தார்.
1946 ஆம் ஆண்டு முதல் 1948 ஆம் ஆண்டு வரை மினசோட்டா பல்கலைக்கழகத்தில் பெல்லோ கற்பித்தல் பணிகளை மேற்கொண்டார். 1947 ஆம் ஆண்டின் இலையுதிர்காலத்தில், தி விக்டிம் என்ற புதினத்தை விளம்பரப்படுத்த ஒரு சுற்றுப்பயணம் செய்தார். அவர் மினியாப்பொலிசின் பிராசுபெக்ட் பார்க் அருகில் உள்ள 58 ஆர்லின் தெருவிலுள்ள எசு.இ.யில் உள்ள வீட்டில் குடியேறினார்.[6]. 1948 ஆம் ஆண்டில், பெல்லோவுக்கு கக்கன்னெய்ம் உறுப்பினர் என்ற தகுதி வழங்கப்பட்டது, இதன் மூலம் இவர் பாரிசு சென்றார். அங்கு அவர் தி அட்வென்ச்சர்சு ஆஃப் ஆகி மார்ச் (1953) எனும் நூலினை எழுதத் தொடங்கினார். பெல்லோவின் பிகரேசுக் புதினத்திற்கும் 17 ஆம் நூற்றாண்டின் சிறந்த எசுப்பானிய இலக்கியமன டான் குய்க்சோட்டிற்கும் இடையிலான ஒற்றுமை குறித்து விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
1961 ஆம் ஆண்டு வசந்த காலத்தில் அவர் ரியோ பியட்ராசில் உள்ள புவேர்ட்டோ ரிக்கோ பல்கலைக்கழகத்தில் படைப்பாற்றல் பிரிவினை கற்பிக்கும் பணியினை மேற்கொண்டார்[7]. அவரது மாணவர்களில் ஒருவரான வில்லியம் கென்னடி, பெல்லோவால் புனைகதை எழுத ஊக்குவிக்கப்பட்டார்.
விருதுகள் மற்றும் கவுரவங்கள்
தொகுபுனைகதைக்கான தேசிய புத்தக விருதை மூன்று முறை வென்ற ஒரே எழுத்தாளர் இவர் ஒருவரே [2] என்பது சிறப்பு மிக்கதாகும். மேலும் 1990 ஆம் ஆண்டில் தேசிய புத்தக அறக்கட்டளையின் வாழ்நாள் பதக்கத்தைப் பெற்றார். இவரது இலக்கியப் பணிகளுக்காக, பெல்லோவுக்கு புலிட்சர் பரிசு, இலக்கியத்திற்கான நோபல் பரிசு, மற்றும் தேசிய கலைப் பதக்கம் ஆகியன இவருக்கு வழங்கப்பட்டன.
மேற்கோள்கள்
தொகு- ↑ University of Chicago accolades – National Medal of Arts. Retrieved 8 March 2008.
- ↑ 2.0 2.1 "National Book Award Winners: 1950–2009". National Book Foundation. Retrieved 12 March 2012.
- ↑ "Distinguished Contribution to American Letters". National Book Foundation. Retrieved 12 March 2012.
- ↑ The New York Times obituary, 6 April 2005. "He had hoped to study literature but was put off by what he saw as the tweedy anti-Semitism of the English department, and graduated in 1937 with honors in anthropology and sociology, subjects that were later to instill his novels."
- ↑ Great Jewish Men. Jonathan David Company. பார்க்கப்பட்ட நாள் 21 October 2007.
- ↑ Leader, Zachary (2015). The Life of Saul Bellow: to fame and fortune, 1915-1964. New York: Alfred A. Knopf. p. 64. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-307-26883-9. இணையக் கணினி நூலக மைய எண் 880756047.
- ↑ Bellow, Saul (2010). Saul Bellow: Letters. redactor Ben Taylor. New York: Viking. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781101445327. பார்க்கப்பட்ட நாள் 12 July 2014.
... Puerto Rico, where he was spending the spring term of 1961.