சாவடி
சாவடி, தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் உள்ள ஒரு பொது இடம் ஆகும். சாவடியானது தூண்களும், ஓடுகள் வேய்ந்த கூரையும், தரைத்தளமும் கொண்ட அமைப்பாகும். சாவடியைச் சுற்றி சுற்றுச் சுவர்கள் இருக்காது..பொதுவான விஷயங்கள் மற்றும் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து கிராம மக்கள் ஒன்று கூடி ஊர் பஞ்சாயத்து பேசுவதற்கும், மக்கள் கேட்கும் வகையில் இராமாயணம், மகாபாரதம், புராணச் சொற்பொழிவுகள் ஆற்றுவதற்கும் சாவடி பயன்படுகிற்து.[1] சாவடியின் பராமரிப்பு பணிக்கான நிதியை, கிராமத்தினர் பங்களிக்கும் பொது நிதியிலிருந்து செலவழிக்கப்படுகிறது.
சாவடியில் நீர் அருந்த பானை வைக்கப்பட்டிருக்கும்.சத்திரம் போன்று வழிப்போக்கர்கள் களைப்பு தீர ஓய்வு எடுக்கவும்; தூங்குவதற்கும் மட்டும் அனுமதிக்கப்படுகிறது. விரும்பினால் வழிப்போக்கர்களுக்கு கிராம மக்கள் உணவு தரலாம். ஏனெனில் சாவடிகளில் சமையல் கூடம் இருப்பதில்லை.