தண்ணீர்ப் பந்தல்

தண்ணீர்ப் பந்தல் என்பது கோடைக்காலத்தில் மக்களின் தாகம் தணிக்க இலவசமாகத் தண்ணீர் வழங்கப்படும் இடமாகும். சிலர் நீர்மோர்ப் பந்தல் அமைப்பதும் உண்டு.

கிருட்டிணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் இருந்து ஒசூர் செல்லும் மாநில நெடுஞ்சாலை ஓரத்தில் அமைந்துள்ள கல்லால் அமைக்கப்பட்ட ஒரு பழமையான தண்ணீர்ப் பந்தல் தொட்டி, இதன்மேல் புடைப்புச் சிற்பமாக லிங்கமும், நந்தியும் செதுக்கப்பட்டுள்ளன.

அமைக்கப்படும் விதம்தொகு

ஓலைப் பந்தலிலோ அல்லது நிழல் உள்ள குளிர்ந்த இடத்திலோ மணல் குவித்து அதன்மீது மண்பாணையில் தண்ணீர் ஊற்றி வைக்கப்படும். சில இடங்களில் மர நிழலில் நிரந்தரமாக கற்பலகை கொண்டு அமைக்கப்பட்ட பழைய நீர்த் தொட்டிகளும் உள்ளன.

அமைக்கப்படும் இடங்கள்தொகு

தண்ணீர் பந்தல்கள் பெரும்பாலும் சாலை ஓரமாக மககள் நடமாட்டம் மிகுந்த இடங்களில் அமைக்கப்படுவது வழக்கம். திருவிழா காலங்களில் திருவிழா நடக்குமிடங்களில் கூடும் மக்கள் தாகம் தணிக்கவும் தண்ணீர்ப் பந்தல்கள், நீர் மோர்ப் பந்தல்கள் அமைக்கப்படும்.

வரலாறுதொகு

தமிழகத்தில் பழங்காலத்திலிருந்தே தண்ணீர் பந்தல் அமைக்கும் வழக்கம் இருந்துள்ளது.

திருவிளையாடல் புராணத்தில்தொகு

திருவிளையாடல் புராணத்தில் உள்ள 35வது படலமான தண்ணீர்ப் பந்தல் வைத்த படலம் என்னும் கதையில் பாண்டிய வீரர்களுக்கு சிவபெருமானே தண்ணீர்ப்பந்தல் வைத்தது தாகம் தணித்ததாக கதை உள்ளது.[1]

பெரிய புராணம்தொகு

பெரிய புராணத்தில் அப்பர் பெயரில் அப்பூதியடிகள் தண்ணீர்ப்பந்தல் அமைத்து அறப்பணி செய்ததாக அப்பூதியடிகள் வரலாறில் கூறப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தண்ணீர்ப்_பந்தல்&oldid=2100975" இருந்து மீள்விக்கப்பட்டது