திருவேள்விக்குடி கல்யாண சுந்தரேசுவரர் கோயில்

திருவேள்விக்குடி கல்யாண சுந்தரேசுவரர் கோயில் சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்ற சிவத்தலமாகும்.தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 23வது தலம் ஆகும்.

தேவாரம் பாடல் பெற்ற
திருவேள்விக்குடி கல்யாண சுந்தரேசுவரர் கோயில்
அமைவிடம்
மாவட்டம்:மயிலாடுதுறை
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
பாடல்
பாடல் வகை:தேவாரம்

அமைவிடம்

தொகு

இத்தலம் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டத்தில் அமைந்துள்ளது.

இறைவன்,இறைவி

தொகு

இத்தலத்திலுள்ள இறைவன் கல்யாணசுந்தரேஸ்வரர், இறைவி பரிமளசுகந்தநாயகி[1] இறைவன் மணவாளேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.

கோயில் அமைப்பு

தொகு

நுழைவாயிலைக் கடந்து உள்ளே சென்றால் வரசித்திவிநாயகர் உள்ளார். கொடிமரம், பலிபீடம், நந்தியைக் கடந்து உள்ளே செல்லும்போது மூலவர் சன்னதி உள்ளது. மூலவர் சன்னதியின் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அடிமுடிகாணா அண்ணல், பிரம்மா, விஷ்ணு துர்க்கை உள்ளனர். அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. இக்கோயிலில் ஈசானமூர்த்தி, பரிமளசுகந்தநாயகி, ஆடல்வல்லான், கல்யாணசுந்தரர் கல்யாணசுந்தரி, வலஞ்சுழி விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், ராமர் சீதை லட்சுமணர் அனுமார், கஜலட்சுமி ஆகியோருக்கான சன்னதிகள் உள்ளன. திருச்சுற்றில் ஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், சுந்தரர், விநாயகர், நாவுக்கரசர் ஆகியோர் உள்ளனர். கோயிலின் முன்புறம் குளம் உள்ளது. இக்கோவிலின் ஒரு பகுதியை செங்குந்த கைக்கோளர் குடியைச் சேர்ந்த குடும்பம் கட்டியதாக கி.பி.1085 ஆவது வருட கல்வெட்டு ஒன்று குறிப்பிடுகிறது.[2]

சிறப்புகள்

தொகு

சிவனின் திருமண வேள்வி நடைபெற்ற தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

மேற்கோள்கள்

தொகு
  1. வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடப்பெற்ற திருத்தலங்கள், சைவ சித்தாந்த ஆய்வு மையம், தஞ்சாவூர் 613 009, 2014
  2. V. Rajendran. RELIGIOUS CONDITION AS GLEANED FROM THE INSCRIPTIONS OF MAYILADUTHURAI REGION (PDF) (in ஆங்கிலம்). {{cite book}}: line feed character in |title= at position 41 (help)

இவற்றையும் பார்க்க

தொகு

படத்தொகுப்பு

தொகு