சாஸ்தாம்கோட்டை ஏரி
சாஸ்தாம்கோட்டை ஏரி, இதை ஈரநிலம் என்றும் குறிப்பிடுவதுண்டு.இதுவே கேரள மாநிலத்தில் உள்ள மிகப் பெரிய நன்னீர் ஏரி ஆகும். சாஸ்தாம்கோட்டை தரும சாஸ்தா கோவில் இந்த ஏரிக்கரையில் அமைந்துள்ளது.கொல்லம் மாவட்டத்தில் சுமார் 5 லட்சம் மக்களுக்கு தேவையான குடிநீர் இந்த ஏரியில் இருந்து கிடைக்கிறது. மேலும் இந்த ஏரியில் மீன்வளமும் மிகுதியாக உள்ளது.
சாஸ்தாம்கோட்டை ஏரி | |
---|---|
அமைவிடம் | கேரளா |
ஆள்கூறுகள் | 9°02′N 76°38′E / 9.03°N 76.63°E |
வடிநிலப் பரப்பு | 12.69 கிமீ2 |
வடிநில நாடுகள் | இந்தியா |
மேற்பரப்பளவு | 373 ஹெக்டேர் |
சராசரி ஆழம் | 6.53மீ |
அதிகபட்ச ஆழம் | 15.2மீ |
நீர்க் கனவளவு | 22.4 M.m3 |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 33மீ |
குடியேற்றங்கள் | கருநாகப்பள்ளி மற்றும் சாஸ்தாம்கோட்டை |
அமைவு
தொகுஅஷ்டமுடி ஏரியின் வடக்கே உள்ள கொல்லம் நகரத்தில் இருந்து சுமார் 25 கி.மீ., மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து சுமார் 105 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சாஸ்தாம்கோட்டை ஏரி.இந்த ஏரியின் மிக அருகில் உள்ள பட்டினம் கருநாகப்பள்ளி சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது. மேற்கு கல்லடா பகுதியில் இருந்து சாஸ்தாம்கோட்டை வரையில் இந்த ஏரி வழியாக படகு சேவை உள்ளது.[1][2]
சாஸ்தாம்கோட்டை ஏரியில் மிகுதியாக காணப்படும் காவாபோரஸ் (cavaborus) வகை லார்வாக்கள் நீரில் உள்ள நுண்ணுயிரிகளை உண்பதால் ஏரி நீர் சுத்தமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது[1]
நிலப் பண்பியல்
தொகுசாஸ்தாம்கோட்டை ஏரியின் தெற்கே கல்லடா நதியின் படுகையில் நெல் வயல்கள் உள்ளன, பிற அனைத்து பக்கங்களிலும் செங்குத்தான குன்றுகளும் பள்ளத்தாக்குகளும் தான். ஏரியின் தெற்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளில் சிறிய அளவிலான நீர்தேக்கங்கள் உள்ளன. ஏரியின் அதிகபட்ச பகுதிகள் விவசாயத்திற்காகப் பயன்படுத்தப்பட்டு விட்டதால் ஏரியின் தற்போதைய பரப்பளவு 375 ஹெக்டேர் மட்டும் தான்.
நீர்வளம்
தொகுஇந்த ஏரிக்கு உபநதிகள் ஏதும் இல்லாவிட்டாலும் ஏரியின் அடிப்பாகத்தில் உள்ள நீரூற்றுகள் ஆண்டு முழுவதும் நீர் மட்டத்தை நிலையாக நிறுத்த உதவுகிறது. பருவமழைக்காலத்தின் இறுதியில் இந்த ஏரியின் நீர் மட்டம் அதிகபட்ச உயரத்தை எட்டுகிறது. நிலத்தடி நீர் சுமார் 3.89 மீ. ஆழத்தில் இருந்து கிடைக்கிறது.
பாதுகாப்பு மற்றும் மேலாண்மை
தொகுசாஸ்தாம்கோட்டை ஏரியின் பாதுகாப்பு மேலாண்மையைக் கருத்தில் கொண்டு கேரள அரசு கடந்த 1999-ஆம் ஆண்டு பாதுகாப்பு மற்றும் மேலாண்மை செயல் திட்டம் (MAP) அமல்படுத்தியுள்ளது.
படக்காட்சியகம்
தொகு-
ஏரி
-
ஏரிக்கரையில் உள்ள ஒரு கிராமம்
-
இந்திய ஏரிகளில் காணப்படும் டீல் இன வாத்து
-
ஏரியில் வாழும் டீல் வாத்துகள்
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 http://www.wetlands.org/reports/ris/2IN017en.pdf பரணிடப்பட்டது 2011-05-27 at the வந்தவழி இயந்திரம் Information Sheet on Ramsar Wetlands(RIS)
- ↑ http://www.ramsar.org/profile/profiles_india.htmThe Annotated Ramsar List: India