சிக்கன் லாலிபாப்
சிக்கன் லாலிபாப் (Chicken Lollipop) என்பது வறுத்த கோழி மற்றும் பசியைத் தூண்டும் பொருள் சேர்த்து சமைக்கப்படும் ஒரு பிரபலமான இந்திய உணவு ஆகும்.
காரம் மற்றும் சுவையூட்டிகளால் தோய்க்கப்பட்ட சிக்கன் லாலிபாப் இந்திய நாட்டின் கோவா மாநிலத்தில் பரிமாறப்பட்டது | |
வகை | துவக்க உணவு |
---|---|
பரிமாறப்படும் வெப்பநிலை | துவக்க உணவு |
தொடங்கிய இடம் | இந்தியா |
தொடர்புடைய சமையல் வகைகள் | இந்திய உணவு |
பரிமாறப்படும் வெப்பநிலை | சூடானது |
முக்கிய சேர்பொருட்கள் | கோழிக் கறி, குழை மாவு |
வேறுபாடுகள் | மட்டன் லாலிபாப் |
சிக்கன் லாலிபாப் என்பது அடிப்படையில் ஒரு "பிரெஞ்சு" கோழி உணவு ஆகும். இறைச்சி மற்றும் எலும்பு முனையிலிருந்து தளர்வாக வெட்டப்பட்டு கீழே தள்ளப்பட்டு குச்சிமிட்டாய் தோற்றத்தை உருவாக்குகிறது.[1]
செய்முறை
தொகுசமையல் தனி நபர்களுக்கு மாறுபடும்.[2] இருப்பினும், பலர் கோழி இறக்கை அல்லது தொடையின் நடுப் பகுதியைப் பயன்படுத்தத் தொடங்குகிறார்கள். நடுப் பிரிவில் இரண்டு எலும்புகளில் ஒன்று அகற்றப்பட்டு, பிரிவுகளில் உள்ள சதை எலும்பின் ஒரு முனைக்குத் தள்ளப்படுகிறது. இவை பின்னர் முக்கிய பொருளான ஒரு காரமான சிவப்பு நிறத்தில் மிளகாய் தூள் மஞ்சள் தூள் மற்றும் குழை மாவு உடன் பூசப்படுகிறது.[3] மசாலா பூசப்பட்ட கோழி இரண்டு மணி நேரம் ஊறவைக்கப்படுகிறது. ஊறவைக்கப்பட்ட கோழி பொதுவாக எண்ணெயில் ஆழமான வறுத்து, மற்றொரு முறையில் அதிகமான வெப்பத்தில் வறுக்கப்படுகிறது.வெளிப்படும் எலும்பு சில நேரங்களில் அலுமினியத் தாளில் மூடப்பட்டிருக்கும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "The 10 Best Types of Fried Chicken, Explained". Thrillist. 27 July 2018. பார்க்கப்பட்ட நாள் 20 September 2019.
- ↑ “Chicken Lollipop Recipe.” Swasthi's Recipes, 11 Dec. 2021. Retrieved 18 February 2022
- ↑ "Chicken Lollipops Recipe". www.grouprecipes.com. பார்க்கப்பட்ட நாள் 20 September 2019.