சிக்கிளீனர்
சிக்கிளீனர் (CCleaner) என்பது பிரிபார்ம் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட பயன்பாட்டு மென்பொருளாகும்.[1] சிகிளீனரைப் பயன்படுத்துவதன் மூலம் தேவையற்ற கோப்புகளையும் தவறான விண்டோசுப் பதிவகப் பதிவுகளையும் நீக்க முடியும்.
விண்டோசு எக்ஸ்பியில் சிகிளீனர் | |
உருவாக்குனர் | பிரிபார்ம் |
---|---|
தொடக்க வெளியீடு | 23 செப்டம்பர் 2003 |
அண்மை வெளியீடு | 3.17.1689 / 27 மார்ச்சு 2012 |
இயக்கு முறைமை | விண்டோஸ் 2000உம் அதற்குப் பிந்தியவையும் மாக் ஓ. எசு. எக்சு 10.5உம் அதற்குப் பிந்தியவையும் |
கிடைக்கும் மொழி | 47 மொழிகள் |
மென்பொருள் வகைமை | பயன்பாட்டு மென்பொருள் |
உரிமம் | பகுதியாக இலவசம் |
இணையத்தளம் | www |
வசதிகள்
தொகுசிகிளீனரானது, இன்டர்நெட் எக்ஸ்புளோரர், விண்டோசுத் துருவி, ஃபயர் ஃபாக்சு, சபாரி, கூகிள் குரோம், அடோப் அக்ரோபேட், அடோப் போட்டோசாப், அடோப் ரீடர், கூகுள் எர்த், மெக்காபி நச்சுநிரல்தடுப்பி, மைக்ரோசாப்ட் விசுவல் ஸ்டுடியோ, மைக்ரோசாப்ட் ஆபிஸ் பிக்சர் மனேஜர், நீரோ பர்னிங் ரோம், மைக்ரோசாப்ட் ஆபிஸ், பிட்டொரன்ட், கூகிள் டாக், இன்டர்நெட் டவுன்லோட் மனேஜர், இசுகைப், சன் ஜாவா, யுடொரன்ட், அடோப் ஃப்ளாஷ் ப்ளேயர், கே. எம். பிளேயர், மேக்ரோமீடியா ஷாக்வேவ், வி. எல். சி. ஊடக இயக்கி, வின் ஆம்ப், விண்டோசு மீடியா பிளேயர், வின்ரேர், மைக்ரோசாப்ட் மனேஜ்மென்ட் கன்சோல், மைக்ரோசாப்ட் பெயின்ட் முதலிய மென்பொருட்களால் உருவாக்கப்படும் தேவையற்ற தற்காலிகக் கோப்புகளை அழிப்பதற்கு உதவுகின்றது.[2]
சிகிளீனரின் மூலம் மென்பொருள்களை நீக்கவும் முடியும்.