சிக்கோணிபார்மிஸ்
கொக்கு, நாரை, குருகு, பூநாரை, அரிவாள் மூக்கன், கரண்டிவாயன், காலணி அலகி, கத்தித்தலை இனங்களை உள்ளடக்கிய ஆறு குடும்பங்கள் சிக்கோணிபார்மிஸ் வரிசையில் உள்ளன.

வாழிடம் தொகு
அனைத்துப் பகுதிகளிலும் பரவிக் காணப்படும். காலணி அலகி, கத்தித்தலை இரு இனங்களும் ஆப்பிரிக்காவுக்கு உரியவை. ஆஸ்திரேலியாவில் பூநாரைகளும், வட அமெரிக்காவில் நாரைகளும் காணப்படுவதில்லை. ஆஸ்திரேலியாவில் நாரைகள் ஓரினம் மட்டுமே காணப்படும். ஐரோப்பாவில் நாரை, உண்ணிக்கொக்கு இனங்கள் மென்னீர் நிலைகளில் வாழ்கின்றன. உப்பு, காரத்தன்மை கொண்ட நீர் நிலைகளையும் நாடிச் செல்லும்.
அமைப்பு தொகு
மிகப் பெரிய நாரைகள் 1.2 மீ உயரம் கொண்டவை. விரித்து வைக்கப்பட்ட இறக்கைகளின் இருமுனைகளுக்கும் இடைப்பட்ட இடைவெளி 2.6 மீ நீளம் இருக்கும். மிகச் சிறிய இனங்கள் 30 செ.மீ அளவிலும், 100 கிராம் எடையிலும் இருக்கும். நடுத்தரனமான இனங்கள் 60-90 செ.மீ உயரம் உள்ளவை.
இறகுகள் தொகு
பெரும்பாலான இனங்கள் வெண்மையான இறகுகளையும், சாம்பல் நிற இறகுகளையும் கொண்டிருக்கும். சில நாரை இனங்களில் கறுப்பு இறகுகளும் காணப்படும். கத்தித்தலை நாரைகளின் இறகுகள் பழுப்பு நிறத்திலும், பூநாரை, கரண்டிவாயனின் இறகுகள் சிவப்பு நிறம். பெரிய குருகு, புலிக்கொக்கு இனங்கள் சுற்றுச்சூழலுக்கேற்ப அமைந்துள்ளன.
உணவு தொகு
பெரும்பாலான பறவைகள் கூட்டமாகவே சேர்ந்துத் திரிகின்றன. ஆப்பிரிக்காவிலுள்ள குளங்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட இனங்கள் கூடி வாழ்கின்றன.குருகு, காலனிஅலகி, புலிக்கொக்கு இனங்கள் தனித்தே இரைத் தேடி திரியும்.[1]
மேற்கோள்கள் தொகு
- ↑ அறிவியல் களஞ்சியம் தொகுதி 13