சிங்கப்பூர், தெற்கு கடற்கரை
சிங்கப்பூர், தெற்கு கடற்கரை (South Beach, Singapore) என்பது டவுன்டவுன் கோரில் கடற்கரை சாலையில் அமைந்துள்ள ஒரு வணிக மற்றும் குடியிருப்பு வளாகம் ஆகும். இது தங்கும் விடுதிகள், பல அலுவலகங்கள், கடைகள் மற்றும் இல்லங்களைக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தில் நான்கு பாதுகாப்பு கட்டிடங்கள் மீளமைக்கப்பட்டுள்ளன. கடற்கரை சாலை முகாமின் ஒரு பகுதியான முன்னாள் அதிகாரிகளின் விடுதிக் கட்டிடம் உட்பட. இந்த கட்டிடம் 2016 ஆம் ஆண்டில் நிறைவு செய்யப்பட்டது.
வரலாறு
தொகுதள வரலாறு
தொகு1930இன் மூன்று இராணுவத் தொகுதிகள் அடங்கிய நான்கு பாதுகாப்புப் கட்டிடங்கள் (பகுதி 1, 9 மற்றும் 14) மற்றும் 1952 இல் கட்டப்பட்ட அதிகாரிகளின் விடுதி ஆகியவை இதில் அடங்கும். 2002 ஆம் ஆண்டில் பழைய கான்கிரீட் கட்டடங்கள் வரலாற்று மற்றும் கட்டிடக்கலை முக்கியத்துவம் காரணமாக பாதுகாக்கப்படுகிறது. 1967 ல் கடற்கரைச் சாலையில் முதன்முதலில் தேசிய சேவைக்கு ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற்றது. முன்னாள் அதிகாரிகளின் விடுதி முதலில் சிங்கப்பூரின் கடற்படை, இராணுவம் மற்றும் விமானப்படை நிறுவனங்களின் தலைமையகமாக வடிவமைக்கப்பட்டது, மேலும் ஒரு நீச்சல் குளமும் இங்கு இருந்தது. இராணுவத் தொகுதிகள் எழில்படுக் கலைகள் பாணியில் நேர்த்தியான, செயல்பாட்டு அம்சங்களாக அறியப்படுகின்றன. அதே நேரத்தில் விடுதி ஒரு கலப்பினமாகவும், 1950 ஆம் ஆண்டுகளில் நவீன கட்டிடக்கலை என்றும் அழைக்கப்பட்டது.[1][2]
தள திட்டங்கள்
தொகு2006 ஆம் ஆண்டு செப்டம்பர்27-29 ஆகிய தேதிகளில், ஹாங்காங்கின் ஒரு நிறுவனத்திம் மூலம் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (URA) கடற்கரை சாலை தளத்தை உருவாக்க திட்டமிட்டது. 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் "இரண்டு-உறை" அமைப்பு மூலம்விலைப்புள்ளி வெளியிடப்பட்டது. இதில் ஏல விலைகள் தங்கள் கருத்துருவின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டது. நகரின் பொது இடங்களின் வசதி மற்றும் உயர்தர கட்டமைப்பு ஆகியவற்றிற்கு வழங்கிய பங்களிப்பிற்கான பரிந்துரைகள் மதிப்பீடு செய்யப்பட்டன. ஜூலை 2007 இல் விலைப்புள்ளி ஏழு நிறுவனங்களில் இருந்து கருத்துரு பெறப்பட்டது. அவர்களில் சிலர் உயர்ந்த விலையை அளித்தாலும் கூட ஐந்து பேர் நிராகரிக்கப்பட்டனர்; இது போண்டிக் லேண்ட் குரூப் மற்றும் மார்கன் ஸ்டான்லி, கேபிடாலாண்ட் என்ற நிறுவங்களுக்கு இத்திட்டம் வழங்கப்பட்டது.
கட்டிடக்கலை
தொகுஇரண்டு புதிய கோபுரங்கள் கொண்ட இத்திட்டத்தில், 45 மாடி உயத்தில், இரண்டு ஆடம்பர விடுதிகள், அலுவலகங்கள் மற்றும் அடுக்கு மாடி குடியிருப்பு. பழைய கடற்கரைச் சாலை இராணுவ கட்டிடங்களின் அறைகள் உணவு விடுதி தொடர்பான செயல்பாட்டு அறைகளுடன் உருவாக்கப்பட்டன. இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சம் 46,450 சதுர மீட்டர் (500,000 சதுர அடி) புதிய அலுவலக இடம் மற்றும் 700 முதல் 800 விடுதி அறைகள் சேர்க்கப்பட்டுள்ளது.
குறிப்புகள்
தொகு- ↑ Tay Suan Chiang (22 September 2007). "Shade of doubt: Beach Road's upcoming wave-like canopy is drawing criticism for covering historical buildings in the area". The Straits Times: p. L11.
- ↑ Norman Edwards, Peter Keys (1996). Singapore – A Guide to Buildings, Streets, Places. Singapore: Times Books International. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9971-65-231-5.