நகர நடுவம் (Downtown Core) என்பது, சிங்கப்பூரின் நகரப் பகுதிகளில் இருக்கும், மிக முக்கியமான பகுதியாகும். இந்நிலப்பகுதி 266-எக்டேர் ஆகும். இது சிங்கப்பூர் நகர அரசின், நகர திட்டப்பகுதியின் தென்புறத்தில் உள்ளது. சிங்கப்பூர் ஆற்றின் முகத்துவாரத்தில் அமைந்து, அதன் தென்கிழக்கு வடிநிலமாக அமைந்துள்ளது. மேலும், இப்பகுதி சிங்கப்பூரின் மைய வணிகப் பகுதியின் ஒரு பகுதியாக அமைந்தள்ளது. சிங்கப்பூர் ஆறு, சிங்கப்பூரின் மைய வணிகப் பகுதி இருந்து தோன்றி, இந்த நகர நடுவப் பகுதியில், கடலோடு கலக்கிறது. மேலும், இப்பகுதியில் பழைய துறைமுகமும் அமைந்துள்ளது குறிப்பிடதக்க சிறப்பாகும். இதன் கட்டிட அமைப்பு, வட அமெரிக்காவில் இருக்கும், நகர நடுவத்தினைப் போன்றதாகும். இருப்பினும், இது மைய வணிகப் பகுதியின் கட்டிட, நகர அமைப்பில் இருந்து, கோட்பாடு அடிப்படையில் வேறுபாடு உடையதாக திகழ்கிறது.[1]

சிங்கப்பூரின் நகர நடுவம்
பெயர் transcription(s)
 • சீனம்新加坡市中心
 • ஆங்கிலம்Downtown Core
சிங்கப்பூரின் நகர நடுவம் - சிங்கப்பூர் ஆறு, பாடங்கு விளையாட்டுத் திடல், சிங்கையின் வானளாவிகள்
சிங்கப்பூரின் நகர நடுவம் - சிங்கப்பூர் ஆறு, பாடங்கு விளையாட்டுத் திடல், சிங்கையின் வானளாவிகள்
நாடுசிங்கப்பூர்
பரப்பளவு
 • மொத்தம்2.66 km2 (1.03 sq mi)

முக்கியத்துவம்

தொகு

இ்ப்பகுதி சிங்கப்பூரின் மக்கள்தொகை அடர்வாக உள்ள பகுதிகளில் ஒன்றாகும்.[2] சிங்கப்பூரின் வானளாவிகள் அதிகம் உள்ள பகுதியாக இது விளங்குகிறது. சிங்கப்பூரின் பொருளாதார வளங்களை அதிகப்படுத்தும் நிறுவனங்களும், சிங்கப்பூர் நாடாளுமன்றமும், அரசு மேலாண்மை அலுவலகங்களும், அமைப்புகளும் இங்குதான் உள்ளன. சிங்கப்பூரின் உச்சநீதிமன்றம், முக்கிய மாவட்டங்கள், நகர மண்டபம், உலகின் பெரிய வணிக நிறுவனங்களின் கிளைகள் ஆகிய அனைத்தும் இங்கே அமைத்துள்ளன. மேலும், சிங்கப்பூர் கலாச்சாரப் பகுதிகளும் இங்குள்ளது குறிப்பிடத்தகுந்த பெருமையாகும்..

நகர வரலாறு

தொகு
 
சாக்சன் திட்ட வரைபடம், 1822
 
சிங்கப்பூர் கப்பல் குழாம்

சிங்கப்பூர் ஆற்றின் முகத்துவாரத்தில் பழைய துறைமுகம் உள்ளது. இது தற்போதுள்ள சிங்கப்பூர் துறைமுகத்தின் முற்பகுதியாகும். எனவே, இதனைச் சுற்றியுள்ள பகுதிகள், துறைமுக நகரமாக வளர்ந்தது. இத்தொகுப்புக் குடியிருப்புகளில் வணிக வளாகங்களும், மேலாண்மை அலுவலகங்களும், நிதியியல் அமைப்புகளும் வளர்ந்தோங்கின. 1823 ஆம் ஆண்டு, இராஃபெல்சு என்பவரால் நடைமுறைபடுத்தப் பட்ட சாக்சன் திட்டத்தால், சிங்கப்பூர் மாற்றியமைக்கப் பட்டது. அப்பொழுது வணிக சதுக்கமும்(தற்போது ராஃபில்ஸ் இடம் என்றழைக்கப்படுகிறது), ஐரோப்பிய நகரம், பல்வேறு வணிக, அரசு மேலாண்மை அலுவலகங்களும் அருகருகே அமைக்கப் பட்டன. இப்பகுதியே, தற்போது நகரநடுவம் என அழைக்கப்படுகிறது.

காட்சியகம்

தொகு

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "/na/displaystory.cfm?story _id=E1 _ RSRQGRD Reviving American downtowns". The Economist. 1 March 2007.
  2. "Census of Population 2010 Statistical Release 3: Geographic Distribution and Transport". Archived from the original on 2013-04-10. பார்க்கப்பட்ட நாள் 2015-11-30.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நகர_நடுவம்&oldid=3575433" இலிருந்து மீள்விக்கப்பட்டது