சிங்களைட்டு
சிங்களைட்டு (Sinhalite) என்பது MgAl(BO4) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும்.[1] போரேட்டு கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது.
சிங்களைட்டு Sinhalite | |
---|---|
வகை | கனிமம் |
இனங்காணல் | |
நிறம் | வெண்மை, சாம்பல், சாம்பல் நீலம், வெளிர் முதல் அடர் பழுப்பு, மஞ்சள், மஞ்சள் பழுப்பு, பச்சை கலந்த பழுப்பு, பச்சை, இளஞ்சிவப்பு, பழுப்பு கலந்த இளஞ்சிவப்பு |
படிக இயல்பு | சிறுமணிகள், ஒழுங்கற்ற திரட்சிப் படிகங்கள். |
படிக அமைப்பு | நேர்ச்சாய்சதுரம் |
பிளப்பு | இல்லை |
முறிவு | சங்குருவம் |
மோவின் அளவுகோல் வலிமை | 6 1⁄2-7 |
கீற்றுவண்ணம் | வெண்மை |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகும், ஒளி கசியும் |
ஒப்படர்த்தி | 3.46 to 3.50 |
அடர்த்தி | 3.475-3.5 |
ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (-) |
ஒளிவிலகல் எண் | 1.665 to 1.712 |
இரட்டை ஒளிவிலகல் | 0.036 to 0.042 |
பலதிசை வண்ணப்படிகமை | மூவண்ண ஒளிர்வு: பச்சை, இளம் பழுப்பு, அடர் பழுப்பு |
2V கோணம் | 56° |
நிறப்பிரிகை | 0.018 |
புறவூதா ஒளிர்தல் | இல்லை |
முதன்முதலில் இலங்கையில் (சிலோன்) 1952 ஆம் ஆண்டில் இக்கனிமம் கண்டுபிடிக்கப்பட்டது. இலங்கையின் சமசுகிருதப் பெயரான சிங்களம் என்ற பெயரிலிருந்து சிங்களைட்டு என்ற பெயர் இக்கனிமத்தின் பெயராக வைக்கப்பட்டது.[2]
மடகாசுகர், தான்சானியா மற்றும் மியான்மர் (பர்மா) ஆகிய நாடுகளிலும் இரத்தினக் கல் தரமான சிங்களைட்டு கனிமத்தைக் காணலாம். சிங்களைட்டு மிகவும் பொதுவாகக் காணப்படும் நிறம் வெள்ளையும் சாம்பலும் கலந்த நிறமாகும். சாம்பல்-நீலம் அல்லது வெளிறிய முதல் அடர் பழுப்பு வரையிலான நிறத்திலும் இது காணப்படுகிறது. வெளிர் இளஞ்சிவப்பு மற்றும் பழுப்பு இளஞ்சிவப்பு படிகங்கள் தான்சானியாவில் காணப்படுகின்றன.
பன்னாட்டு கனிமவியல் சங்கம் சிங்களைட்டு கனிமத்தை Shl[3] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sinhalite". Mindat.org.
- ↑ "Sinhalite gemstone information". Gemdat.org. பார்க்கப்பட்ட நாள் 21 March 2019.
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.