சிங்கினிகார் (நெல்)
சிங்கினிகார் சிறு செலவில் பயிராகும் பாரம்பரிய நெல் இரகமான இது, மழை, நீர் தேக்கத்திலும் இயற்கைச் சீற்றங்களைத் தாங்கி வளரும் வல்லமைக் கொண்டது. இயற்கையாகவே நோய் எதிர்ப்புச் சக்தி கொண்ட இந்த நெல் இரகம், நடுத்தர வகையாகவும், சிவப்பு நிற நெல்லையும், சிவப்பு நிற அரிசியையும் உடையது. களைகள் நிறைந்துள்ள நிலத்திலும் சாகுபடி செய்ய ஏற்றதான இந்நெல், இடுபொருள் இல்லாமலேயே சாகுபடி செய்யக்கூடிய நெல் இரகமாகும்.[1]
சிங்கினிகார் |
---|
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
வகை |
பாரம்பரிய நெல் வகை |
தோற்றம் |
பண்டைய நெல் இரகம் |
மாநிலம் |
தமிழ் நாடு |
நாடு |
இந்தியா |
மறுசுழற்சி மகத்துவம்
தொகுஇந்த நெல் வகைச் சாகுபடியில் அறுவடைக்குப் பின் வைக்கோலின் பெரும்பகுதி நிலத்தில் சிதைந்து மக்குவதால், மண்ணின் சத்து கூடுகிறது. இந்தச் சத்தையே உணவாக எடுத்துக்கொண்டு வளரும் தன்மையை இயற்கையாகவே இந்த இரகத்துக்கு உண்டு. நிலத்தில் மக்கும் பொருட்களால் மண்ணில் உண்டாகும் நுண்ணுயிர்களைச் சத்துகளாக எடுத்துக்கொண்டு, இடுபொருள் செலவு தேவையின்றி சாகுபடி செய்யக்கூடிய நெல் இரகமான சிங்கினிகார், அந்த வகையில் இது செலவில்லாத நெல் இரகமாக விளங்குகிறது.[1]
நோய் எதிர்ப்பு
தொகுசிங்கினிகார் நெல்லின் அரிசி உணவுக்கும், பலகார வகைகளுக்கும் ஏற்றது. இந்த அரிசியின் சிறப்பு அவல், மற்றும் பொரிக்கு ஏற்ற இரகமாகும். நோய் எதிர்ப்புச் சக்தி மிகுந்த இது. தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமாகவும், நோயாளிகள் இதன் அரிசிக்கஞ்சிக் குடிப்பதன் மூலம், மிகுந்த பலத்தையும், உடல் நலத்தையும் பெறுவார்கள் என்பது குப்பிடதக்க ஒன்று.[1]
இவற்றையும் காண்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "நம் நெல் அறிவோம்: செலவில்லாத ரகம் சிங்கினிகார்". தி இந்து (தமிழ்) - மே 23, 2015. பார்க்கப்பட்ட நாள் 2017-01-03.