சிங்கி சாம்

சிங்கி சாம் (Singhi Chham) அல்லது காஞ்சென்சோங்கா நடனம் என்பது சிக்கிமில் ஆடப்படும் ஒரு வகை சிங்க நடன வடிவமாகும். இதில் நடனக் கலைஞர்கள் பனி சிங்கத்தைக் குறிக்கும் சிங்க உடையில் நடனத்தினை நிகழ்த்துகிறார்கள். இது பூட்டியா மக்களின் நடனம் ஆகும். இந்நடனம் 18ஆம் நூற்றாண்டில் சிக்கிமின் மூன்றாவது சோக்கியால் வம்ச சாடர் நாம்கியால் அறிமுகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.[1] இந்நடனமானது வழக்கமாக பங்கலாப்ப்சூல் திருவிழாவின் போது நிகழ்த்தப்படுகிறது.

இந்த நடனத்தில், இரண்டு முதல் நான்கு பேர் பனி சிங்க வேடமிட்டு நடனம் ஆடுவர். ஒவ்வொரு பனி சிங்கமும் சிங்க உடையில் இரண்டு ஆண் சிங்க வேடத்தில் உள்ளன. வெள்ளை நிறத்தில் நீல நிற தாடியுடன் வேடமிடுவர். இந்த நடனத்தின் போது ஒரு முரசு வாத்திய கலைஞரும் இடம் பெறுவார்.[2] சிக்கிம் மக்களுக்குப் புனிதமான கஞ்சன்ஜுங்கா சிகரங்கள் (காங்-சென் ஸோங் பாங்) புகழ்பெற்ற பனி சிங்கத்தை ஒத்திருப்பதாக நம்பப்படுவதால் இது மத ரீதியான தொடர்பைக் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Singhi Chham Dance". India9. 29 January 2019. பார்க்கப்பட்ட நாள் 17 September 2020.
  2. Shobhna Gupta (2007). Dances of India. Har-Anand. p. 76. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8124108666.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்கி_சாம்&oldid=3913038" இலிருந்து மீள்விக்கப்பட்டது