முதன்மை பட்டியைத் திறக்கவும்


ஹாரி சிங்ளேர் லுயிஸ்(Harry Sinclair Lewis பிப்ரவரி 7, 1885 - ஜனவரி 10, 1951) ஒரு அமெரிக்க நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர் மற்றும் நாடக ஆசிரியர். 1930-ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற முதல் அமெரிக்க எழுத்தாளர் என்ற பெருமைக்குரியவர். "விறுவிறுப்புடைய, உயிர் சித்திரமான விவரிப்புகளுக்காகவும், பகடியும் நகைச்சுவையும் மிகுந்த கதாபாத்திரங்களை உருவாக்கியதற்காகவும்" இந்த விருதை பெற்றுள்ளார். அமெரிக்க முதலாளித்துவம் மற்றும் பொருள்முதல் வாதம் பற்றிய நுண்ணறிவு மிகுந்த நடுநிலையான எழுத்துக்களை முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில் எழுதியதற்காக அறியப்பட்டார்.நவயுக வேலைக்கு செல்லும் மகளிரை உறுதியான கதாபாத்திரங்களாக எழுதியதற்காக மதிக்கப்பட்டார். எச்.எல்.மென்கென் "நமது இந்தக் கலைத்துறையில் அதிகாரப்பூர்வ நாவலாசிரியர் ஒருவர் உண்டென்றால், அது இந்த சிவந்த முடியுடைய மின்னசோட்டாவின் காடுகளில் இருந்து வந்த சூறாவளித்தான்" என்கிறார். ஐக்கிய அமெரிக்கக் குடியரசு தபால் நிறுவனம் "சிறந்த அமெரிக்கர்கள்" தொடரில், இவருக்கு அஞ்சல் தலை வெளியிட்டு சிறப்பு செய்துள்ளது.தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்ளேர்_லுயிஸ்&oldid=2571741" இருந்து மீள்விக்கப்பட்டது