சிசுநாகன்

சிசுநாகன் (Shishunaga) (கிமு 444 – 363) வட இந்தியாவின் தற்கால பிகார் மாநிலத்தில் இருந்த மகத நாட்டில், கிமு 412ல் சிசுநாக வம்சத்தை நிறுவியவர். மகதத்தை ஆண்ட ஹரியங்கா வம்ச இறுதி மன்னர் நாகதாசகரின் அமைச்சராக சிசுநாகன் இருந்தவர்.

சிசுநாகன்
சிசுநாக வம்சத்தை நிறுவியவர்.
ஆட்சிக்காலம்கிமு 412 - 395
முன்னையவர்ஹரியங்கா வம்சத்தின் நாகதாசகர்
பின்னையவர்காலசோகன் (காகவர்ணன்)
குடும்பம்உறுப்பினர்காலசோகன்
அரசமரபுசிசுநாக வம்சம்

ஹரியங்கா வம்ச மன்னர் நாகதாசகனுக்கு எதிராக மக்களை தூண்டி, கிளர்ச்சியின் மூலம் ஹரியங்கா வம்ச மன்னரை நீக்கி, சிசுநாகன் மகத நாட்டின் மன்னரானவர். இவரது தலைநகரமாக ராஜகிரகம் இருந்தது. இவரது மகன் காலச்சோகன் வாரணாசியின் ஆளுநராக இருந்தார்.

இளமைதொகு

வைசாலி நாட்டை ஆண்ட லிச்சாவி குலத்தில் சிசுநாகன் பிறந்ததாக மகாவம்சம் நூல் கூறுகிறது. [1]. மகத நாட்டின், ஹரியங்கா வம்ச இறுதி மன்னரான நாகதாசகனின் அமைச்சராக சிசுநாகன் இருந்தார். மன்னர் நாகதசகனுக்கு எதிரான கிளர்ச்சியைப் பயன்படுத்தி, சிசுநாகன் மகத நாட்டு மன்னரானார்.[2]

ஆட்சிக் காலம்தொகு

மகத நாட்டை சிசுநாகன் கிமு 413 முதல் 395 முடிய ஆண்டார்.[3][4] துவக்கத்தில் ராஜ்கிரகத்தை தலைநகராகக் கொண்டார். பின்னர் தலைநகரத்தை வைசாலிக்கு மாற்றினார். சிசுநாகன் அவந்தி நாட்டை வென்று பிரதியோத்தா வம்சப் பெருமயை அழித்தவர்.[2]

நிலப்பரப்பு விரிவாக்கம்தொகு

கிமு 425ல் சிசுநாகன் வட இந்தியா முழுமையையும் கைப்பற்றி மகத நாட்டை விரிவாக்கினான்.

சிசுநாகனுக்குப் பின் அவரது மகன் காலச்சோகன் மகத நாட்டின் அரியணை ஏறினார்.[2]

அடிக்குறிப்புகள்தொகு

  1. Upinder Singh 2016, ப. 272.
  2. 2.0 2.1 2.2 Raychaudhuri 1972, ப. 193–5.
  3. Raychaudhuri 1972, ப. 201.
  4. Thapar 1990.

மேற்கோள்கள்தொகு

  • Mahajan, V.D. (2007) [1960], Ancient India, New Delhi: S. Chand, ISBN 81-219-0887-6
  • Raychaudhuri, H.C. (1972), Political History of Ancient India, Calcutta: University of Calcutta
  • Singh, Upinder (2016), A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century, Pearson Education, ISBN 978-93-325-6996-6
  • Thapar, Romila (1990) [1966], A History of India, 1, Penguin Books, ISBN 978-0-14-194976-5
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிசுநாகன்&oldid=2712127" இருந்து மீள்விக்கப்பட்டது