சிடானாய்டைட்டு
சிடானாய்டைட்டு (Stannoidite) என்பது Cu6+Cu22+(Fe2+,Zn)3Sn2S12 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். தாமிரம், இரும்பு, கந்தகம், துத்தநாகம், வெள்ளீயம் ஆகிய தனிமங்கள் சேர்ந்துள்ள ஒரு சல்பைடு கனிமமாக இது தோன்றுகிறது. வெள்ளீயம் தனிமத்தைக் குறிக்கும் இலத்தின் மொழிச் சொல்லான சிடானம் என்பதையும் போன்ற என்பதைக் குறிக்கும் ஆய்டா என்ற சொல்லையும் சேர்த்து சிடானாய்டைட்டு என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. நீர்வெப்ப Cu-Sn படிவுகளில் பெரும்பாலும் சிடானாய்டைட்டு கனிமம் காணப்படுகிறது[1][2].
சிடானாய்டைட்டு Stannoidite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | சல்பைடு கனிமம் |
வேதி வாய்பாடு | Cu6+Cu22+(Fe2+,Zn)3Sn2S12 |
இனங்காணல் | |
நிறம் | வெண்கல பழுப்பு |
படிக இயல்பு | ஒரே மாதிரியாக பிரித்தறிய முடியாத படிகங்கள் பெரிய பொதிகளாக உருவாகின்றன |
படிக அமைப்பு | செஞ்சாய்சதுரம் |
பிளப்பு | இல்லை |
முறிவு | சங்குருவம் – சமமற்று |
மோவின் அளவுகோல் வலிமை | 4 |
மிளிர்வு | உலோகம் |
கீற்றுவண்ணம் | பழுப்பு, சாம்பல் |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகாது |
ஒப்படர்த்தி | 4.29 |
மேற்கோள்கள் | [1][2][3] |
1969 ஆம் ஆண்டு சப்பான் நாட்டில் இருக்கும் ஒன்சூ தீவில் ஒக்காயமா நிர்வாகப் பிரிவில் கொஞ்சோ சுரங்கத்தில் முதன் முதலாக சிடானாய்டைட்டு கண்டுபிடிக்கப்பட்டது[2].
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Stannoidite. Webmineral
- ↑ 2.0 2.1 2.2 Stannoidite. Mindat.org
- ↑ Kudoh Y., Takeuchi Y. (1976). "The superstructure of stannoidite". Zeitschrift für Kristallographie – Crystalline Materials 144 (1–6): 145. doi:10.1524/zkri.1976.144.16.145. Bibcode: 1976ZK....144..145K.