சிட்னம், நியூ சவுத் வேல்ஸ்

சிட்னம் (Sydenham) ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சிட்னியின் உள் மேற்கு பிராந்தியத்தில் உள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். [1] இது சிட்னியின் மத்திய வணிக மாவட்டத்திற்கு தெற்காக 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சிட்னம் மரிக்வில், செயின்ட் பீட்டர்ஸ் மற்றும் டெம்பே புறநகர்ப் பகுதிகளால் சூழப்பட்டுள்ளது.

சிட்னம்
சிட்னிநியூ சவுத் வேல்ஸ்

சிட்னம் புகையிரத நிலையத்தில் சிட்னி R வகுப்பு இல 1923 டிராம், 20 நவம்பர் 1954.
மக்கள் தொகை: 1145
அஞ்சல் குறியீடு: 2044
ஆள்கூறுகள்: 33°55′5″S 151°9′48″E / 33.91806°S 151.16333°E / -33.91806; 151.16333
உள்ளூராட்சிகள்: இன்னர் வெஸ்ட்
மாநில மாவட்டம்: Heffron
நடுவண் தொகுதி: Grayndler

வரலாறு தொகு

1800 களின் பிற்பகுதியில் இலவாரா புகையிரத தடம் அமைக்கப்பட்டதன் பின்னராகவே சிட்னம் பகுதி உருவாக்கப்பட்டது. லண்டன் நகரின் சிட்னம் புறநகர் பகுதியைப் போலவே இதுவும் நகரத்துக்கும் புகையிரத சந்திக்கும் அண்மையில் இருந்த்தால் இந்த பெயர் சூட்டப்பட்டது. 1884 அக்டோபர் 15 இல் திறக்கப்பட்டபோது இங்கிருந்த புகையிரத நிலையம் முதலில் மரிக்வில் என்று அழைக்கப்பட்டது. பின்னர் 1895 இல் பாங்க்ஸ்டவுனுக்கு ஒரு புதிய பாதை கட்டப்பட்டபோது சிட்னம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அது போலவே 1899 இல் டெம்பே பார்க் என்ற பெயரில் திறக்கப்பட்ட தபால் அலுவலகம் 1964 இல் சிட்னம் என மறுபெயரிடப்பட்டது. [2]

போக்குவரத்து தொகு

 
ரயில்வே சாலையில் உள்ள செயின்ட் மேரிஸ் தேவாலயம்

சிட்னம் புகையிரத நிலையம் சிட்னி புகையிரத வலையமைப்பின் இலவாரா, விமான நிலையம், மற்றும் பாங்க்ஸ்டவுன் தடங்கள் சந்திக்கும் புகையிரத சந்தி ஆகும்.

மேற்கோள்கள் தொகு

  1. Australian Suburb Guide: Sydney Inner West பரணிடப்பட்டது 26 திசம்பர் 2012 at the வந்தவழி இயந்திரம் Retrieved 7 August 2013.
  2. The Book of Sydney Suburbs, Compiled by Frances Pollon, Angus & Robertson Publishers, 1990, Published in Australia பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-207-14495-8, page 251

வெளி இணைப்புகள் தொகு

  • Chrys Meader - Marrickville Council (2008). "Sydenham". Dictionary of Sydney. பார்க்கப்பட்ட நாள் 29 செப்டெம்பர் 2015. Chrys Meader - Marrickville Council (2008). "Sydenham". Dictionary of Sydney. பார்க்கப்பட்ட நாள் 29 செப்டெம்பர் 2015. Chrys Meader - Marrickville Council (2008). "Sydenham". Dictionary of Sydney. பார்க்கப்பட்ட நாள் 29 செப்டெம்பர் 2015. Chrys Meader - Marrickville Council (2008). "Sydenham". Dictionary of Sydney. பார்க்கப்பட்ட நாள் 29 செப்டெம்பர் 2015. [ சி.சி-பை-எஸ்.ஏ ]