சிண்டா பள்ளத்தாக்கு

சிண்டா பள்ளத்தாக்கு (Chinta Valley) என்பது படேர்வா-ஜெய் சாலையில் படேர்வா நகரின் வடகிழக்குப் பகுதியில் 20 கிலோமீட்டர் (12 மைல்) தொலைவில் அமைந்துள்ள ஒரு பள்ளத்தாக்கு மற்றும் கிராமமாகும்.[2] இந்த பள்ளத்தாக்கின் அனைத்துப் பக்கங்களிலிருந்தும் அடர்த்தியான ஊசியிலைக் காடுகளால் சூழப்பட்டுள்ளது. அதன் வழியாக சிந்தா நல்லா என்று அழைக்கப்படுகின்ற ஒரு நீரோடை பாய்கின்றது. [a] [3] துபா என்ற கிராமம் படேர்வாவிலிருந்து பள்ளத்தாக்கைப் பிரிக்கிறது.[4]

சிண்டா பள்ளத்தாக்கு
சிண்டா பள்ளத்தாக்கு is located in ஜம்மு காஷ்மீர்
சிண்டா பள்ளத்தாக்கு
சிண்டா பள்ளத்தாக்கு is located in இந்தியா
சிண்டா பள்ளத்தாக்கு
ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி) படேர்வா
Floor elevation6,500 அடி (1,981 m) [1]
ஆள்கூறுகள்33°01′03″N 75°43′38″E / 33.017365°N 75.727157°E / 33.017365; 75.727157

அமைவிடம் மற்றும் சிறப்பு தொகு

தோடா மாவட்டத்தின் கடல் மட்டத்திலிருந்து 6,500 அடி உயரத்தில் சிந்தா அமைந்துள்ளது. இங்கு சுபர் நாக் கோயில் உள்ளது.[5]|name=Subarnag temple}} கடல் மட்டத்திலிருந்து 10,200 அடி உயரத்தில் உள்ள பிரபலமான சுபர்நாக் சிகரத்தில் அமைந்துள்ளது. இது படேர்வா-சிண்டா சாலையின் அருகே உள்ள பாலத்தின் பாதையில் ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.[3] படேர்வா திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ரக்சா பந்தனில் தொடங்கி நவம்பர் மாதம் பௌர்ணமி நாளில் சிண்டா மற்றும் படேர்வாவின் பிற கிராமங்களில் முடிவடைகிறது. சிந்தாவில் ஒரு அரசு ஆரம்ப சுகாதார மையமும் அமைந்துள்ளது.[6]

சுற்றுலா தொகு

படேர்வா, ஜம்மு-காஷ்மீர் ஒன்றியப் பகுதியின் சுற்றுலாத் தலங்களில் சிண்டாவும் ஒன்றாகும். சிண்டா மற்றும் ஜெய் பள்ளத்தாக்குகள் பாராகிளைடிங்கில் அடிப்படைப் பயிற்சிக்கு சாதகமான காலநிலை மற்றும் சூழலைக் கொண்டுள்ளன. பாராகிளைடிங் என்பது மலைப்பாங்கான பகுதிகளின் சிறப்பு ஈர்ப்பம்சமாகும். ஆனால், பாராகிளைடிங்கானது மழைக்காலங்களைத் தவிர ஆண்டு முழுவதும் சாத்தியமாகக் கூடிய ஒன்றாகும்.[7] சிண்டா பள்ளத்தாக்குக்கு ஆறு கிலோமீட்டர் தொலைவில், சிண்டா-படேர்வா சாலையில், ஒரு பாதையானது சுபர்நாக் சிகரத்தை நோக்கி செல்கிறது, அங்கிருந்து சிண்டா பள்ளத்தாக்கு மற்றும் படேர்வா முழு நகரத்தையும் அனைவரும் காணலாம்.[3]

சாலை இணைப்பு தொகு

ஜெய் பள்ளத்தாக்கை மற்ற பகுதிகளுடன் இணைக்கும் மூன்று சாலைகள் உள்ளன, அவை பின்வருமாறு;

பிரதான சாலை தொகு

  • படேர்வா-சிண்டா-ஜெய் சாலை, படேர்வா நகரத்திலிருந்து ஜெய் பள்ளத்தாக்கு செல்லும் 32 கிலோ மீட்டர் (20 மைல்கள்) சாலையானது 20 கிலோ மீட்டர் (12 மைல்கள்) தொலைவில் சிண்டா வழியாக செல்கிறது, சில பகுதிகளைத் தவிர இதர பகுதிகள் நிலக்கீல் பாவுச் சாலைகளைக் கொண்டுள்ள இந்த சாலையே சிண்டாவைப் பார்வையிட பொதுவாகப் பயன்படுத்தப்படும் பிரதான சாலையாகும்.[8]

மாற்று சாலைகள் தொகு

ஜெய் பள்ளத்தாக்கிற்கான காண்டோ-ஜெய் சாலை மற்றும் கஹாரா-ஜெய் பாதை ஆகிய பாதைகள் சிண்டாவினை அடைய பயன்படுத்தலாம். ஏனெனில் ஜெய்யிலிருந்து தெற்கில் 10 கிலோமீட்டர்கள் தொலைவில் தான் சிண்டா அமைந்துள்ளது. ஆகவே, இச்சாலைகளை சிண்டாவை அடையவும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.[9]

பிரபலமான உணவு தொகு

படேர்வாஹி ராஜ்மாஷ் [b] ஜம்மு பிராந்தியத்தில் மிகவும் பிரபலமானது. இந்த ராஜ்மாஷ்கள் தோடா மாவட்டத்தின் சிந்தா பள்ளத்தாக்கில் மக்காச்சோளங்களுடன் ஊடு பயிர்களாக வளர்க்கப்படுகின்றன.[10]

குறிப்புகள் தொகு

  1. Nallah is local word which refers to water stream or rivulet.
  2. Rajmash is the local name of Rajma (the red ராச்மா).

மேற்கோள்கள் தொகு

  1. Qazi, S.A. (2005), Systematic Geography of Jammu and Kashmir, APH Publishing Corporation, p. 245, ISBN 81-7648-786-4
  2. Chowdhary, Charu (20 Jun 2019). "Bhaderwah: What to Experience in J&K's Mini Kashmir". India.com. பார்க்கப்பட்ட நாள் 28 Jun 2020.
  3. 3.0 3.1 3.2 "Chinta Valley". www.jktourism.org. Jammu and Kashmir Tourism. பார்க்கப்பட்ட நாள் 28 Jun 2020.
  4. "Chinta Valley, Bhaderwah". www.nativeplanet.com. பார்க்கப்பட்ட நாள் 28 Jun 2020.
  5. "15,000 devotees visit ancient Subar Nag temple on Baisakhi eve". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 13 Apr 2017. https://timesofindia.indiatimes.com/city/jammu/15000-devotees-visit-ancient-subar-nag-temple-on-baisakhi-eve/articleshow/58159144.cms. 
  6. "23 doctors transferred". 19 Jan 2020. பார்க்கப்பட்ட நாள் 30 Jun 2020.
  7. "Paragliding at Khanni Top". www.jktourism.org. Jammu and Kashmir Tourism. Archived from the original on 7 செப்டம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 29 Jun 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  8. "Jai Valley, an eco-health resort in Bhaderwah". JK Report. பார்க்கப்பட்ட நாள் 24 Jun 2020.
  9. . 15 Jun 2020. 
  10. "Bhaderwah Rajmash: A variety unique in taste". Daily Excelsior. 7 Jul 2019. பார்க்கப்பட்ட நாள் 30 Jun 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிண்டா_பள்ளத்தாக்கு&oldid=3929804" இலிருந்து மீள்விக்கப்பட்டது