சிதம்பர மும்மணிக்கோவை
(சிதம்பர மும்மணிக் கோவை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சிதம்பர மும்மணிக்கோவை [1] என்பது 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குமரகுருபரரால் இயற்றப்பட்டது. கோவை என்னும் சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்தது. மும்மணிக்கோவை நூலுக்கு உரிய இலக்கண முறைப்படி பாடப்பட்டுள்ள நூல் இது. ஆசிரியம், வெண்பா, கட்டளைக் கலித்துறை என்ற முறையில் யாப்பமைதி கொண்ட பாடல்கள் மாறி மாறி வருமாறு 30 பாடல்கள் இதில் அடுக்கப்பட்டுள்ளன. இந்த அடுக்கு அந்தாதியாக உள்ளது. இதன் கருத்துகள் சைவ சித்தாந்தக் கருவூலமாக அமைந்துள்ளன.
நூலில் கூறப்பட்டுள்ள செய்திகளில் சில
தொகு- இங்குக் கோயில் கொண்டுள்ள கோவிந்தராச்ன் பெருமாளும் இதில் பாடப்பட்டுள்ளார்
- சிதம்பரம் விராடபுருடனின் இதயத் தானம்
- திருநடனக் கோலம் பிரணவ வடிவம்.
- பதஞ்சலி வியாக்கரணத்துக்காக ஆனந்தத் தாண்டவம் நிகழ்கிறதாம்
வெளி இணைப்புகள்
தொகுஅடிக்குறிப்பு
தொகு- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1990, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினேழாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 102.
{{cite book}}
: Check date values in:|year=
(help)