சித்திரதுர்க்கா கோட்டை

சித்திரதுர்க்கா கோட்டை (Chitradurga Fort), இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில், சித்ரதுர்கா மாவட்டத்தில்  அமைந்துள்ள பழமை வாய்ந்த மலைக்கோட்டையாகும்.[1][2][3]"அழகிய கோட்டை" என்று   பொருள்படும் சித்ரதுர்காகோட்டை, 15 ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் சித்ரதுர்காவின் நாயக்க மன்னர்களால்  கட்டப்பட்டது.

சித்திரதுர்க்கா கோட்டை


Chitradurga Fort

பகுதி: சித்ரதுர்கா
கருநாடகம், இந்தியா
சித்ரதுர்க்கா கோட்டை மதில்கள், 1868
சித்திரதுர்க்கா கோட்டை Chitradurga Fort is located in கருநாடகம்
சித்திரதுர்க்கா கோட்டை Chitradurga Fort
சித்திரதுர்க்கா கோட்டை
Chitradurga Fort
ஆள்கூறுகள் 14°12′55″N 76°23′43″E / 14.2152°N 76.3953°E / 14.2152; 76.3953
வகை கோட்டை
இடத் தகவல்
கட்டுப்படுத்துவது கர்நாடக அரசு
மக்கள்
அனுமதி
ஆம்
நிலைமை நல்லநிலையில்
இட வரலாறு
கட்டிய காலம் 15 ஆம் நூற்றாண்டு
கட்டியவர் சித்ரதுர்கா நாயக்கர்கள்
கட்டிடப்
பொருள்
கருங்கல் பாறைகள்
சண்டைகள்/போர்கள் 1760, 1770களில் மற்றும் 1799 இல் ஹைதர் அலிக்கு எதிராக நாயக்கர்கள் நடத்திய போர்கள்
சித்ரதுர்கா கோட்டை - நுழைவு வாயில்

வரலாறு

தொகு

கோட்டையின் கல்வெட்டுகளின் மூலம் இது கி.மு 3 வது மில்லினியம் வரையில் உள்ள் வரலாற்று நிகழ்வுகள் குறிக்கப்பட்டுள்ள்து. இது இக்கோட்டையின் பழமையை குறிக்கிறது[4]. சித்ரதுர்கா கோட்டை கிபி 15ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் சித்ரதுர்கா நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது. ஹொய்சாலர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு இந்த பிரதேசம் விஜயநகரப் பேரரசின் கட்டுப்பாட்டில் வந்தது. விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்கள் அவர்களின் வம்சாவளி ஆட்சி வரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் ஆட்சி செய்து வந்தனர். பிறகு சித்ரதுர்காவின் நாயக்க மன்னர்கள் இப்பகுதியின் சுதந்திரமான கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டனர். அவர்கள் 200 ஆண்டுகளாக தங்களின் கடைசி ஆட்சியாளர் மடகாரி நாயக்கர், மைசூரை சேர்ந்த ஹைதர் அலியால் தோற்கடிக்கப்படும் வரை ஆண்டனர். அது வரையிலும் அவர்களின் கோட்டை மற்றும் அவர்களின் மாகாணத்தின் இதயமாய் திகழ்ந்தது[5].

கட்டமைப்புகள்

தொகு

சித்ரதுர்கா கோட்டை கீழ் கண்ட பல கட்டமைப்புகளை கொண்டுள்ளது.

  • 19 கோட்டை நுழைவாயில்கள்
  • 4 கோட்டையின் இரகசிய நுழைவாயில்கள்
  • 38 பின்புற நுழைவாயில்கள்
  • 35 இரகசிய நுழைவாயில்கள்
  • 4 கண்ணுக்கு தெரியாத பத்திகள்
  • 2000 கோபுரங்கள்
  • 1 அழகான அரண்மனை
  • 1 மசூதி
  • பெரிய தானியங்கள் மற்றும்
  • எண்ணெய் குழிகள்

சேமிப்பக கிடங்கு, வீடுகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் முதன்மையாக நீண்டகால முற்றுகைகளை எதிர்கொள்ள தேவையான உணவு, நீர் மற்றும் இராணுவப் பொருட்களை உறுதிப்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த வசதிகள் அனைத்தையும் இன்னும் சிறப்பாக பராமரிக்கப்படுகிறது. இதன் கட்டுமானம் வடிவமைப்பின் முதன்மையாக தற்காப்பு இருந்தது.கோட்டையின் சுவர்களில் சிறிய வாயில்களில் வில்லாளர்கள் எதிரிகளின் மீது அம்புகளை எறிவதற்காக பயன்படுத்தப்பட்டன. இந்த சுவர்களுக்கு நான்கு வாயில்கள் வழங்கப்பட்டு உள்ளது. இந்த நான்கு வாயில்கள் இரங்க வாயில் என்று அழைக்கப்படுகின்றன, இரண்டாவது சித்தயான வாயில் என்றும், மூன்றாவது உட்சாங்கி வாயில் என்றும், நான்காவது லால்கோட்டை வாயில் என்றும் அழைக்கப்படுகிறது.நிலப்பகுதி மற்றும் புவியியல் பரப்பளவைப் பொறுத்து, கோட்டையின் சுவர்கள் 5-13 மீ (16.4-42.7 அடி) உயரத்தில் கட்டப்பட்டுள்ளன. ஆரம்பத்தில், அது சேற்றால் கட்டப்பட்டது ஆனால் பின்னர் 15ம் நூற்றாண்டில் கருங்கல் அடுக்குகளை வைத்து எழுப்பப்பட்டது[6].இக்கோட்டையில் பதினெட்டு கோவில்களும் கட்டப்பட்டுள்ளன. புகழ்பெற்ற கோயில்களில் சில: ஹேபேஸ்வரர் (பழங்கால புராணத்துடன் இணைக்கப்பட்டுள்ளது), சம்பி சித்தரேஸ்வரர், ஏகநாதம்மா, பால குனேஷ்வரா, கோபாலா கிருஷ்ணா, ஹனுமான், சுபராயா மற்றும் நந்தி ஆகியோரைக் கொண்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Chitradurga". Archived from the original on 2006-02-18. பார்க்கப்பட்ட நாள் 2009-06-15.
  2. "Chitraudurg city". Archived from the original on 2009-02-06. பார்க்கப்பட்ட நாள் 2009-06-15.
  3. Barry Lewis. "An Informal History of the Chitradurga Nayakas". Urbana, IL 61801: UIUC Department of Anthropology. Archived from the original on 2011-05-15. பார்க்கப்பட்ட நாள் 2009-06-15.{{cite web}}: CS1 maint: location (link)
  4. Dr. Suryanath U. Kamath, A Concise history of Karnataka from pre-historic times to the present, Jupiter books, MCC, Bangalore, 2001 (Reprinted 2002)
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-05-15. பார்க்கப்பட்ட நாள் 2017-06-19.
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-05-15. பார்க்கப்பட்ட நாள் 2017-06-19.

குறிப்புகள்

தொகு
  1. "Chitradurga பரணிடப்பட்டது 2006-02-18 at the வந்தவழி இயந்திரம்". பார்த்த நாள் 2009-06-15.
  2. "Chitraudurg city பரணிடப்பட்டது 2009-02-06 at the வந்தவழி இயந்திரம்". பார்த்த நாள் 2009-06-15.
  3. Barry Lewis. "An Informal History of the Chitradurga Nayakas". Urbana, IL 61801: UIUC Department of Anthropology. பார்த்த நாள் 2009-06-15
  4. "Chitradurga Fort – Bangalore பரணிடப்பட்டது 2009-05-19 at the வந்தவழி இயந்திரம்". பார்த்த நாள் 2009-06-16.
  5. "Chitradurga Paleyagar family பரணிடப்பட்டது 2007-02-06 at the வந்தவழி இயந்திரம்". பார்த்த நாள் 2009-06-17.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்திரதுர்க்கா_கோட்டை&oldid=3697463" இலிருந்து மீள்விக்கப்பட்டது