சித்தூர்காவு தேவி கோயில்
சித்தூர்காவு தேவி கோவில், இந்தியாவில் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் பாலக்காடு நகரத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் சித்தூர் நகராட்சிக்குட்பட்ட எல்லையில் உள்ளது. இக்கோயிலின் மூலவர் துர்கா தேவி ஆவார். 'சந்தத்தோம்' என்பது தெய்வத்தின் முக்கியமான காணிக்கையாகும். தொடர்ந்த காணிக்கையின் இங்குள்ள மூலவர் சிலை அடர் கருப்பு நிறமாக மாறியது.
புராணம்
தொகுகாளியின் தெய்வீக பிறப்பு பற்றிய புராணக்கதை கூறப்படுகிறது. தாருகன் என்ற பொல்லாத அரக்கன். பிரம்மாவிடமிருந்து பெற்ற அற்புத வரத்தால் மூன்று உலகங்களையும் வென்றான். அவனுடைய தொடர்ச்சியான துன்புறுத்தலின் காரணமாக தேவர்கள் மிகவும் துன்பப்பட்டனர். இதன் விளைவாக கோபமடைந்த சிவபெருமான் கோபத்தின் நெருப்பிலிருந்து காளியை உண்டாக்கினார். அசுரனைக் கொல்லும் பணி காளியிடம் ஒப்படைக்கப்பட்டது. தாருகனின் மனைவியான தாருகி பார்வதியின் பக்தை ஆவார். சும்பனும் நிசும்பனும் தாருகியை பக்தியோடு பார்வதியை அழைக்க தாருகனிடம் கூறுகின்றனர். பார்வதியே காளி என்பதை அவர்கள் அறியவில்லை. தாருகனின் குணத்தால் கோபமடைந்த காளி தாருகனின் மனைவியுடைய வேண்டுகோளை ஏற்காமல் அவனைக் கொன்றார், இதனால் சும்பனும், நிசும்பனும் ஓடிவிட்டனர்.
விழாக்கள்
தொகுகோயிலில் நவராத்திரி, கண்யார் உற்சவம் (மங்களம் புதன்), கும்மட்டி (வெள்ளி), கொங்கன் பாடம் (திங்கள்) போன்ற விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. [1]