சிற்றூர், தாத்தமங்கலம்

இந்தியாவின் கேரளாவிலுள்ள ஒரு கிராமம்

சிற்றூர் (ஆங்கிலம்:Chittur) என்பது தென்னிந்தியாவின் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது சிற்றூர் தாலுகாவின் தலைமையகமும் ஆகும். இது பாலக்காட்டிலிருந்து தென்கிழக்கில் 13 கி.மீ தூரத்தில் கண்ணாடிப்புழா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது, இது கேரளாவின் இரண்டாவது மிக நீளமான நதியான பாரதப்புழாவின் முக்கிய கிளை நதியாகும். இது ஒரு காலத்தில் முந்தைய கொச்சின் இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்தது.

சிற்றூர்
நகரம்
சிற்றூர் நகராட்சி அலுவலகம்
சிற்றூர் நகராட்சி அலுவலகம்
ஆள்கூறுகள்: 10°42′N 76°45′E / 10.70°N 76.75°E / 10.70; 76.75
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்பாலக்காடு
அரசு
 • வகைஇந்தியாவின் ஊராட்சி மன்றம்
 • நிர்வாகம்நகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்1,155.10 km2 (445.99 sq mi)
ஏற்றம்131 m (430 ft)
மொழி
 • அலுவல்மலையாளம்
நேர வலயம்IST (ஒசநே+5:30)
வாகனப் பதிவுKL-70
புது நகரம்
அந்தயில் கோயில்

கோயில்கள் தொகு

சிற்றூர் தாத்தமங்கலம் நகரம் கொச்சின் தேவஸ்வம் வாரியத்தின் கீழ் உள்ள புகழ்பெற்ற சிற்றூர் பகவதி கோயிலைக் கொண்டுள்ளது. மற்ற முக்கிய கோயில்கள் பழயனூர் பகவதி கோயில், துர்கா கோயில், சிவசேத்திரம் (இலங்கேஸ்வரம் அக்ரகாரம்) ஆகியன. நகராட்சியில் சிற்றூர், தாத்தமங்கலம், பள்ளிமோக்கு, கண்ணந்தறா, புழம்பலம், கச்சேரிமேடு, அனிகோடு, தெக்கேகிராமம், காடம்பிடி ஆகியவை உள்ளன. சித்தூரின் சட்டமன்ற உறுப்பினர் ஜனதா தளத்தின் (மதச்சார்பற்ற) கே.கிருஷ்ணன் குட்டி என்பவராவார்.

பொருளாதாரம் தொகு

விவசாயமே மக்களின் முக்கிய தொழில். இந்த நகரம் கேரளாவின் சில முக்கிய மேனன் குடும்பங்களின் தாயகமாகும். பல அக்ரகாரங்களும் (பிராமணர்களின் குடியிருப்பு), மூத்தன் குடும்பங்களும் உள்ளன.

வரலாறு தொகு

சோகநாசினி நதி சிற்றூர் வழியாக பாய்கிறது, இந்த ஆற்றின் கரையில் தான் மலையாள மொழியின் தந்தை துஞ்சத்து ராமானுசன் எழுதச்சன் தனது கடைசி நாட்களைக் கழித்தார். அவரது இறுதி ஓய்விடம் வித்யாரம்ப கொண்டாட்டங்களுக்கு பிரபலமானது. அங்கு சிறு குழந்தைகளுக்கு சொற்களை எழுதவைத்து அறிவு உலகில் தொடங்கப்படுகிறார்கள். சிற்றூர் முன்பு ஒரு இராணுவ பாசறையாக இருந்துள்ளது. தாத்தமங்கலம் பற்றிய வரலாற்று புத்தகங்கள், வரைபடங்களில் "தட்டமுங்கலம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது [1]

சிற்றூர், தாத்தமங்கலம், அருகிலுள்ள நகரங்களைப் பற்றியும் "திருவிதாங்கூர் மற்றும் கொச்சின் கணக்கெடுப்பின் நினைவகம் 1816-1820" இல் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் இந்த புத்தகத்தில்தான் "தட்டமுங்கலம்" எழுத்துப்பிழையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. கொச்சி இராச்சியத்தின் பழைய வரைபடத்திலும் தாத்தமங்கலம், சிற்றூர் பகுதிகள் காட்டப்பட்டுள்ளன. [2]

திருவிழாக்கள் தொகு

இசையானது இங்குள்ள மக்களின் வாழ்க்கை முறையாகும். அரசு கல்லூரி மாணவர்களுக்கு இசையில் உயர் பட்டங்களை பெறுவதற்கான பயிற்சி இந்த நகரம் அளிக்கிறது. 'கொங்கன் பாடா' என்பது சித்தூரின் முக்கிய கொண்டாட்டமாகும். இது மார்ச் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. சூரசம்காரம், நிறமாலா, அய்யப்பன் விளக்கு ஆகியவற்றையும் இங்கு கொண்டாடுகிறார்கள். மற்ற விழாக்களான ஓணம், பொங்கல், விஷு, தீபாவளி, நவராத்திரி போன்றவையும் கொண்டாடப் படுகின்றன. விஷுவின் போது, விஷு வேலாவும் கொண்டாடப்படுகிறது. நவராத்திரி, கொங்கன்பாடா நேரத்தில் சிற்றூர் காவில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இவை தவிர, இலங்கேஸ்வரம் கிராமத்தில் ஆருத்ரா தரிசனம் (திருவாதிரை ரதோற்சவம்) என்ற ஒரு முக்கிய நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் திசம்பர் இறுதியில் அல்லது சனவரி மாதத்தின் முதல்வாரத்தில் நடத்தப்பட்டு வருகிறது

புள்ளி வவிவரங்கள் தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, [3] சிற்றூர்-தாத்தமங்கலம் 31,884 என்ற மக்கள் தொகையைக் கொண்டிருந்தது. மக்கள்தொகையில் ஆண்கள் 49 சதவீதமும், பெண்கள் 51சதவீதமும் இருந்தனர். சிற்றூர்-தாத்தமங்கலத்தின் சராசரி கல்வியறிவு விகிதம் 79 சதவீதம் ஆகும். இது தேசிய சராசரியான 59.5 சதவீதத்தை விட அதிகமாகும். ஆண்களின் கல்வியறிவு 84 சதவீதமும் மற்றும் பெண் கல்வியறிவு 74சதவீதமும் இருக்கின்றனர். மக்கள் தொகையில் 9 சதவீதம் பேர் 6 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். சிற்றூர் சில நேரங்களில் கேரளாவின் "நெல்லாரா" என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கு ஆலப்புழாவின் அரிசி கிண்ணம் என்ப்பொருள்படும். இங்கு தமிழ் பேசும் மக்கள் தொகை 65 சதவீதமாகும்.

போக்குவரத்து தொகு

சிற்றூர்-தாத்தமங்கலம் நகரம் இந்தியாவின் பிற பகுதிகளுடன் பாலக்காடு நகரம் வழியாக இணைகிறது. தேசிய நெடுஞ்சாலை எண் 544 கோவை மற்றும் பெங்களூருடன் இணைகிறது. கேரளாவின் பிற பகுதிகளை திருச்சூர் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 66 வழியாக அணுகலாம். அருகிலுள்ள பெரிய இரயில் நிலையம் பாலக்காடு ஆகும் அருகிலுள்ள விமான நிலையம் கோவை ஆகும்.

குறிப்புகள் தொகு