சித்னல் சண்முகப்பா பாசப்பா
சித்னல் சண்முகப்பா பாசப்பா (Sidnal Shanmukhappa Basappa) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1936 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.[1] இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இருந்த இவர் கர்நாடகாவின் பெலகாவி தொகுயிலிருந்து தொடர்ந்து நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார்.
சித்னல் சண்முகப்பா பாசப்பா | |
---|---|
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 6 ஏப்ரல் 1936 சம்பகாவன், பெல்காம் (கருநாடகம்) |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | சுசீலா (8 மே 1966) |
கல்வி | பி.ஏ., எல்.எல்.பி., |
தொழில் | வழக்கறிஞர் & உழவர். |
பின்னணி
தொகுசண்முகப்பா கர்நாடகாவின் பெல்காவி மாவட்டத்தில் உள்ள சம்பகாவனில் பிறந்தார். இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான பாசப்பா சித்னல் இவரது தந்தையாவார்.[2]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுசண்முகப்பா 1966 ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் தேதியன்று சுசிலா என்ற பெண்னை திருமணம் செய்து கொண்டார். [3] இத்தம்பதியருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் என மூன்று குழந்தைகள் இருந்தனர்.
2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் கோவிட்-19 தொற்றுநோய் பரவலின் போது கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு இவர் இறந்தார்.
பதவிகள்
தொகு# | தொடக்கம் | முடிவு | பதவி |
---|---|---|---|
1 | 1958 | 1962 | தலைவர் - இளைஞர் காங்கிரசு, பெல்காம் மாவட்டம் |
2 | 1969 | 1973 | பொதுச் செயலாளர் - மாவட்ட கூட்டுறவு வங்கி, கர்நாடகா |
3 | 1973 | 1976 | கர்நாடக மின்சார வாரிய உறுப்பினர் |
4 | 1980 | 1984 | ஏழாவது மக்களவை உறுப்பினர், பெளகாவி மக்களவைத் தொகுதி. |
5 | 1984 | 1989 | பெளகாவி மக்களவைத் தொகுதி, எட்டாவது மக்களவை உறுப்பினர். |
6 | 1989 | 1991 | பெளகாவி மக்களவைத் தொகுதி, ஒன்பதாவது மக்களவை உறுப்பினர் |
6 பிப்ரவரி 1990 |
| ||
1990 |
| ||
7 | 1991 | 1996 | பெளகாவி மக்களவைத் தொகுதி, பத்தாவது மக்களவை உறுப்பினர். |
மேற்கோள்கள்
தொகு- ↑ ಮಾಜಿ ಸಂಸದ, ಕಾಂಗ್ರೆಸ್ ಹಿರಿಯ ನಾಯಕ ಎಸ್.ಬಿ. ಸಿದ್ನಾಳ್ ಇನ್ನಿಲ್ಲ! (in கன்னட மொழி)
- ↑ "Former Belagavi MP S.B. Sidnal passes away" (in en-IN). The Hindu. 2021-04-27. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/national/karnataka/former-belagavi-mp-sb-sidnal-passes-away/article34422606.ece.
- ↑ "Lok Sabha Members Bioprofile-". பார்க்கப்பட்ட நாள் 13 December 2017."Lok Sabha Members Bioprofile-". Retrieved 13 December 2017.