சித்ரலதா தொடருந்து நிலையம்

சித்ரலதா இரயில் நிலையம் (Chitralada railway station) அல்லது சுவான் சித்ரலதா அரச இரயில் நிலையம் தாய்லாந்தில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது பாங்காக்கில் துசித் மாவட்டத்திலுள்ள சுவான் சிட்லதா துணைப்பிரிவில் சாவன்கலோக் சாலையில் அமைந்துள்ளது.

சித்ரலதா இரயில் நிலையம்

สถานีรถไฟจิตรลดา
பொது தகவல்கள்
அமைவிடம்சாவன்கலோக் சாலை., சுவான் சிட்லதா துணை மாவட்டம், துசித் மாவட்டம், பாங்காக்
ஆள்கூறுகள்13°45′59″N 100°31′28″E / 13.76648°N 100.52452°E / 13.76648; 100.52452
உரிமம்தாய்லாந்து மாநில இரயில்வே
தடங்கள்வடக்குப் பாதை
வடகிழக்குப் பாதை
தெற்குப் பாதை
நடைமேடை3
வரலாறு
மறுநிர்மாணம்1921

இது ஒரு சிறப்பு தொடருந்து நிலையமாகும். இது அரச குடும்பத்திற்கு மட்டுமே சேவை செய்கிறது. இது சாவன்கலோக் சாலையின் பக்கத்தில், சித்ரலதா அரண்மனைக்கு எதிரே, ஹுவா லாம்பொங்கிலிருந்து (பாங்காக் இரயில் நிலையம்) இருந்து 3.29 கிமீ (2 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. இது யோமரத்துக்கும் ராமதிபோடி மருத்துவமனைக்கும் இடையில் அமைந்துள்ளது

இந்தத் தொடருந்து நிலையம் முதலில் மன்னர் சுலலாங்கொர்ன் (ஐத்தாம் ராமா) ஆட்சியில் கட்டப்பட்ட ஒரு மரக் கட்டிடமாகும். பின்னர் 1921 ஆம் ஆண்டில், மன்னர் வஜிராவுத் (ஆறாம் ராமா) ஆட்சியின் போது, ஒரு புதிய நிலையத்தை நிர்மாணித்து ஒரு மாடி செங்கல் கட்டிடமாக கட்டப்பட்டது. அசல் மரக் கட்டிடத்தை மாற்றுவதற்காக இத்தாலிய மறுமலர்ச்சி கட்டிடக்கலை படி கட்டப்பட்ட ஒரு குவிமாடமும் உள்ளது.[1] [2]

மேற்கோள்கள் தொகு

  1. pr.railway (2017-05-03). "สถานีรถไฟหลวงจิตรลดา" [Chitralada Royal Railway Station]. facebook (in thai).{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. "ย้อนอดีตสถานีรถไฟหลวงจิตรลดา" [Retrace Chitralada Royal Railway Station]. Channel 9 MCOT HD (in thai). 2015-10-15.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)