சிந்தகாயலா அய்யண்ணா பட்ருடு

இந்திய அரசியல்வாதி

சிந்தகாயலா அய்யன்னா பட்ருடு (Chintakayala Ayyanna Patrudu) (பிறப்பு 4 செப்டம்பர் 1957) ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த அரசியல்வாதியாவார். நர்சிப்பட்டினம் தொகுதியில் இருந்து ஆந்திர பிரதேச சட்டமன்றத்திற்கு பலமுறை தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]

சிந்தகாயலா அய்யண்ணா பட்ருடு
ஆந்திரப் பிரதேச அரசில் சாலை மற்றும் கட்டடங்கள் துறை அமைச்சர்
பதவியில்
29 மார்ச் 2017 – 29 மே 2019
முதலமைச்சர்நா. சந்திரபாபு நாயுடு
ஆந்திரப் பிரதேச அரசில் பஞ்சாய்த்து ராஜ், ஊரகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர்
பதவியில்
8 ஜூன் 2014 – 28 மார்ச் 2017
முதலமைச்சர்நா. சந்திரபாபு நாயுடு
தொகுதிநர்சிபட்டினம்
ஆந்திரப் பிரதேச அரசில் காடுகள் & சுற்றுச்சூழல் துறை அமைச்சர்
பதவியில்
1999–2004
முதலமைச்சர்நா. சந்திரபாபு நாயுடு
ஆந்திரப் பிரதேச அரசில் அறிவியல் & தொழில்நுட்பம் துறை அமைச்சர்
பதவியில்
1999–2004
முதலமைச்சர்நா. சந்திரபாபு நாயுடு
ஆந்திரப் பிரதேச அரசில் தொழிநுட்பக் கல்வித் துறை அமைச்சர்
பதவியில்
1984–86
ஆந்திரப் பிரதேச அரசில் சாலை மற்றும் கட்டங்கள் & விளையாட்டுத் துறை அமைச்சர்
பதவியில்
1994–95
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1996–98
தொகுதிஅனகாபள்ளி
சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
2004–09
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு4 செப்டம்பர் 1957 (1957-09-04) (அகவை 66)
நர்சிபட்டினம் மண்டலம், விசாகப்பட்டினம் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
அரசியல் கட்சிதெலுங்கு தேசம் கட்சி
துணைவர்பத்மாவதி
பிள்ளைகள்2 மக்ன்கள் (விஜய் மற்றும் ராஜேஷ்)
வாழிடம்நர்சிபட்டினம் மண்டலம்
இணையத்தளம்ayyannapatrudu.com

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நர்சிப்பட்டினத்தில் கொப்புல வெலமா குடும்பத்தில் [2] [3] பிறந்தார். 1978 இல் காக்கிநாடாவிலுள்ள அரசுக் கல்லூரியில் கலைப் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

அரசியல் வாழ்க்கை தொகு

தெலுங்கு தேசம் கட்சியில் உறுப்பினராக இருந்து அரசியலை தொடங்கினார். பின்னர், விசாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நர்சிப்பட்டினம் தொகுதியில் கட்சியின் வேட்பாளராக நியமிக்கப்பட்டார். 1983-88, 1994-96, 1999-2009 மற்றும் 2014 ஆகிய ஆறு முறை தெலுங்கு தேசம் கட்சி சார்பில், அதே தொகுதியிலிருந்து ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1996-98ல் அனகப்பள்ளி தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1989-93, 2009 மற்றும் 2019 இல் அனகப்பள்ளி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார், மேலும் இவர் 2014-19 வரை ஆந்திர பிரதேச அரசாங்கத்தில் அமைச்சராக பணியாற்றினார்.

மேற்கோள்கள் தொகு