சினான்சியே கோரிடா

சினான்சியே கோரிடா
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
ஆக்டினாப்டெர்ஜி
வரிசை:
இசுகார்ப்போனிபார்மிசு
குடும்பம்:
சினான்சிடே
பேரினம்:
சினான்சியே
இனம்:
சி. கோரிடா
இருசொற் பெயரீடு
சினான்சியேகோரிடா
லின்னேயசு, 1766

சினான்சியே கோரிடா (Synanceia horrida), என்பது கழிமுக கல்மீன் என அழைக்கப்படும் அல்லது கல் மீன் என அழைக்கப்படும் ஓர் மீன் சிற்றினமாகும். இது சைனான்சிலிடே குடும்பத்தினைச் சார்ந்த நச்சுத்தன்மையுடைய மீனாகும். இவை பவளப் படிப்பாறையில் அடிப்பகுதியில் வாழக்கூடியவை.[2] இவை பாறையைப் போலப் பாறைகளுடன் உருமறைப்பு செய்து வாழக்கூடியவை. விசமுள்ள மீன்களில் மிக அதிக விசமானதாக இது உள்ளது.[3] இவை பெரும்பாலும் தனியார் மற்றும் பொது மீன் காட்சியகங்களில் கண்காட்சி மீனாகச் சேர்க்கப்படுகின்றன.

விளக்கம்

தொகு
 
கிளீவ்லேண்ட் மிருகக்காட்சிசாலையில் சினான்சியா கோரிடா

இந்த மீனின் அதிகபட்ச நீளம் 60 செ.மீ. வரை இருக்கும்.[4] இது மங்கலான நிறத்தில் காணப்படும். இதன் நிறம் பழுப்பிலிருந்து சிவப்பு-பழுப்பு வரை இருக்கும். இது வெப்பமண்டல பாறைகளின், பாறைகளுக்கு இடையில் தன்னை மறைத்துக்கொண்டு காணப்படும். இது சினான்சியா வெருகோசாவுடன் பல குணாதிசயங்களைப் பகிர்ந்து கொள்கிறது. ஆனால் அந்த இனத்தை விட உயர்விட கண் அமைவினைக் கொண்டுள்ளது.[5] இது ஓரிடத்தில் நிலையாக இருக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளது. இது பதுங்கியிருந்து வேட்டையாட வல்லது. ஆனால் இரையை விரைவாகப் பிடிக்க வாயைத் திறக்கும். பெரும்பாலும் சிறிய மீன், இறால் மற்றும் பிற ஓடுடைய கணுக்காலிகளைச் சாப்பிடுகிறது. இதன் இரை இதனருகில் நீந்தும் வரை காத்திருக்கிறது வேட்டையாடும். கழிமுக கல்மீனை முதன்முதலில் 1766இல் கரோலசு லின்னேயஸ் விவரித்தார்.

பவலும் வாழிடமும்

தொகு

கழிமுக கல்மீன் இந்தோ-மேற்கு பசிபிக் கடலோரப் பகுதிகளான, இந்தியா முதல் சீனா, பிலிப்பீன்சு, பப்புவா நியூ கினி மற்றும் ஆத்திரேலியா, மற்றும் வனுவாட்டிலும் காணப்படுகிறது.[6] இதன் முக்கிய வாழிடமானது பவளப்பாறைகள் அல்லது கயவாய், அல்லது கரையோர நீராகும். இது மந்தமான வண்ணச் செடிகளைச் சுற்றிலும், பாறைகளுக்கு அருகிலும், சுற்றிலும் மறைந்து காணப்படும். சேற்றில் அல்லது மணலில் செயலற்றதாக காணப்படுகிறது.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. IUCN, 2020. The IUCN Red List of Threatened Species. Version 2020-2. . Downloaded 16 July 2020.
  2. "Synanceia horrida, Estuarine stonefish : aquarium". www.fishbase.se. பார்க்கப்பட்ட நாள் 2021-07-25.
  3. Halstead, B.W., 1980. Dangerous marine animals. Cornell Maritime Press, Inc., Maryland, U.S.A.
  4. Halstead, B.W., P.S. Auerbach and D.R. Campbell, 1990. A colour atlas of dangerous marine animals. Wolfe Medical Publications Ltd, W.S. Cowell Ltd, Ipswich, England. 192 p.
  5. Kuiter, R.H. and T. Tonozuka, 2001. Pictorial guide to Indonesian reef fishes. Part 1. Eels- Snappers, Muraenidae - Lutjanidae. Zoonetics, Australia. 1-302.
  6. David, G., 1985. Pêche de subsistance et milieu naturel: les mangrove de Vanuatu et leur intérêt halieutique. Notes et documents d'océanographie. Mission ORSTOM de Port-Vila, 13:67 p. multigr. DOI / ISBN
  7. Allen, G.R. and M.V. Erdmann, 2012. Reef fishes of the East Indies. Perth, Australia: Universitiy of Hawai'i Press, Volumes I-III. Tropical Reef Research.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சினான்சியே_கோரிடா&oldid=3203633" இலிருந்து மீள்விக்கப்பட்டது