சின்னையன் பேட்டைக் குளம்

சின்னையன் பேட்டைக் குளம் என்பது தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலையில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் தானிப்பாடி என்ற ஊருக்கு அருகில் அரூர் செல்லும் மாநில நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள சின்னையன் பேட்டை என்னும் சிற்றூரில் உள்ள குளம் ஆகும். இக்குளம் பாலியல் சிற்பங்களுக்குப் புகழ் பெற்றது. இக்குளத்தில் விதவிதமான பாலியல் உறவுகளை விளக்கும் சிற்பங்கள் நிறைந்துள்ளன.[1] இக்குளம் தமிழக தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

குளத்தில் காணப்படும் பாலியல் சிற்பங்கள்.

120 சதுர அடி பரப்பளவு கொண்ட இக்குளம் 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இப்பகுதியை ஆண்ட சின்னைய நாயக்கன் அல்லது சின்னம நாயக்கன் என்பவன் தனது மகளின் பயன்பாட்டுக்காக இக்குளத்தைக் கட்டியதாகக் கருதப்படுகிறது.[2]

குளத்தைப்பற்றிய செவிவழிக் கதை

தொகு

இக்குளம் பாலுணர்வுச் சிற்பங்களுடன் கூடியதாகக் கட்டப்பட்டதற்கான காரணம் குறித்து சரியாகத் தெரியவில்லை. ஆனால், இதுகுறித்துப் பல்வேறு செவிவழிக் கதைகள் உள்ளன. அப்பகுதியை ஆண்ட குறுநில மன்னன் ஒருவன் தன் மகளுக்குச் சிறுவயதிலேயே திருமணம் செய்வித்து கணவன் வீட்டுக்கு அனுப்பினான். திருமணம் செய்து சென்ற மகள் கணவனைத் துறந்து பிறந்த வீடு வந்தாள். அவளுக்குத் தாம்பத்திய வாழ்க்கைப் பற்றி தெரியாததே காரணம் என்பதை அறிந்து, மனம் நொந்து தன் மகளுக்குக் கலவி பற்றி அறிந்து கொள்ளும் விதமாக அப்பெண் குளிக்க ஒரு குளத்தை வெட்டுவித்து அக்குளத்தின் படிகளில் விதவிதமான உடலுறவு சிற்பங்களை செதுக்கிக் கட்டினான். குளிக்க குளத்துக்குச் சென்ற மகள் அனைத்தையும் அறிந்து கணவனுடன் வாழச் சென்றாளாம்.

மேற்கோள்

தொகு
  1. http://tour.nakkheeran.in/frmTourinner.aspx?Type=2&Tid=16[தொடர்பிழந்த இணைப்பு]
  2. Jeyaraj, V., Directory of Monuments in Tamilnadu, Director of Museum, Government of Tamilnadu, Chennai, 2005, p.73